கடந்த 1984ம் ஆண்டு தமிழ்கவிதை ஜெயபாலன் என்ற பெயர் கொண்ட இலங்கை தமிழர், இலங்கையில் உள்நாட்டு போர் நிகழ்ந்த போது தம் 20ம் வயதில் சுவிஸிஸ் குடிபுகுந்தார்.
சகோதரரின் அடைக்கலத்தில் இருந்த இவர் சுவிஸின் கிரவுபுடென் என்ற இடத்தில் சுர் என்னும் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் சுவிஸில் தச்சுவேலை செய்பவராய் பணிபுரிந்தார்.
இவர் ஜேர்மன் மொழியை நன்கு கற்றதோடு அதை பேசுவதிலும் எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்.
இவர் பணிபுரிந்த வந்த நிறுவனத்திற்கு பாரம்பரிய சறுக்குவண்டிகளை (sledge) வடிவமைத்து தயாரித்து கொடுத்து வந்தார். நாளடைவில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால் தானே சொந்தமாக தன்னுடன் 6 தச்சு தொழிலாளர்க்ளை சேர்த்து கொண்டு பாரம்பரிய சறுக்கு வண்டிகளை தயாரித்து
விற்பனை செய்துள்ளார்.
மிக அழகான வடிவத்துடன் தோற்றம் அளிக்கும் இச்சக்கரமில்லாத வண்டியை 490 பிராங்குகள் (540 டொலர்கள்) என விற்கின்றனர், எனினும் இவர்களுக்கு வண்டி ஒன்றிற்கு 25 பிராங்குகள் என்ற லாபம் மட்டுமே கிடைக்கின்றது.
இந்த சறுக்குவண்டிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் சுவிஸில் உள்ள மக்களிடமும் நல்ல வறவேற்பை பெற்றுள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் இதனை திருமணப்பரிசாக அளிப்பதற்கு வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து ஜெயபாலன் கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டு வீர்னி என்ற சுவிஸ் பெண்ணை மணம் முடித்து 30 வருடங்களாக சுவிஸில் சுபிக்ஷமாக வாழ்ந்து வருகின்றேன் என்றும் சுவிஸ் நாட்டின் மொழியை கற்றுக்கொள்வதும் குளிரும் தான் கடுமையாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக