சனி, 11 ஜனவரி, 2014

சுவிஸ் மருந்து நிறுவனத்தின் மீது பாயும் ஜப்பான்

சுவிசின் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் மீது ஜப்பான் சுகாதார அமைச்சகம் குற்றவியல் புகாரை கொடுத்துள்ளது.

சுவிசில் இருக்கும் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனம் இரத்த அழுத்ததிற்காக அறிமுகம் செய்த புதிய மாத்திரையை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி மிகைப்படுத்த விளம்பரங்களை அளித்திருக்கிறது.
மேலும் ஜப்பான் நாட்டிலும் "டயோவின்" மருந்தானது விற்கப்படுகிறது, இது தவிர 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த மருந்தானது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் "இந்த மருந்தை உட்கொள்பவருக்கு மார்புவலி மற்றும் பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்றும் பொதுவாக இந்த மருந்தானது எல்லா நோயாளிகளுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறியுள்ளனர்.

நோவார்டிஸ் மருந்துபொருட்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி “டேவிட் எப்ஸ்டின்” இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் சட்டத்தின்படி, எவர் ஒருவர் மிகைப்படுத்தபட்ட விளம்பரத்தின் கீழ் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறாரோ அவருக்கு 2 வருடம் சிறைவாசமோ அல்லது இரண்டு மில்லியன் அபராதமோ கட்ட வேண்டும்.
எனினும் இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.