வியாழன், 9 ஜனவரி, 2014

பனிச்சரிவால் பலியான மலைவழிக்காட்டி

சுவிஸின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் மலையேருபவர்களை வழிநடத்தும் அனுபவமிக்க மலை வழிக்காட்டி ஒருவர் பனிச்சருக்கால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையின் காரணத்தால் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவங்கள் பலரின் உயிரை காவு எடுத்துள்ளது.

இச்சம்பங்களில் ஒன்றானது மலைவழிக்காட்டி சாமூவேல் மாத்தே என்பவரின் இறப்பு. 26 வயது நிரம்பிய சாமூவேல் மலையேருவதில் மிகுந்த திறமைவாய்ந்த அனுபவசாலி.
இவர் கடந்த 5ம் திகதி ஆறு பேர் கொண்ட குழுவை 2400 மீற்றர் உயரத்திலுள்ள பனிமலையில் வழிநடத்தி கொண்டு செல்கையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு இவருடன் சேர்ந்து மூன்று பேரை அடித்து சென்றது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் சாம்வேலும் ,இவருடன் வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.