திங்கள், 7 அக்டோபர், 2013

ஓடும் ரயிலிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்



சுவிஸில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த வாலிபருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.
19 வயதே ஆன இவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை சர் ரயில் நிலையத்தில் நடந்தது.
இது குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், அந்த வாலிபர் உண்டேர்வாஷ் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

ரயில் சரியாக 6:01க்கு நிலையத்தை அடைந்தது. ஆனால், அப்போது இறங்காமல் விட்ட வாலிபர் வண்டி கிளம்பிய 3 நிமிடங்கள் கழித்து வண்டியை நிறுத்த உதவும் செயினை இழுத்திருக்கிறார்.

ஆனால் அது பயனடையாததால், உடனே ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து விட்டார். ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் தலையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் இது பற்றிய விசாரணையை நடத்தி வருகிறோம். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் சர் ரயில் நிலையத்திலோ அல்லது 081 257 73 00 என்ற இந்த தொலைபேசி எண்ணுக்கோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.