சுவிட்சர்லாந்து நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மற்றும் அதிநவீன கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு தேசிய வங்கி அறிவித்துள்ளது.
சுவிஸ் தேசிய வங்கியான SNB கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், தற்போது பயன்பாட்டில் உள்ள 50 பிராங்க் கரன்ஸிற்கு பதிலாக அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட 50 பிராங்க் கரன்ஸி நோட்டை அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டு இறுதிக்குள் புதிய 20 பிராங்க் கரன்ஸியையும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும், 2019ம் ஆண்டிற்குள், ஒவ்வொரு ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில், தற்போது உள்ள 10 பிராங்க், 100 பிராங்க், 200 பிராங்க் மற்றும் 1,000 பிராங்க் கரன்ஸி நோட்டுகளுக்கு பதிலாக புதிய மற்றும் அதிநவீன கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்தப்படும்.
சுவிட்சர்லாந்து நாட்டு வரலாற்றில் 1907ம் ஆண்டில் தான் முதன்முறையாக கரன்ஸி நோட்டுகளை மக்களின் பயன்பாட்டிற்கு
அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை 8 முறை புதிய கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது 9வது முறையாக புதிய நோட்டுகளை அச்சிட்டு பயன்பாட்டிற்கு வெளியிடப்பட உள்ளது.
சுவிஸில் புதிய கரன்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய வங்கி கடந்த 2005ம் ஆண்டே அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் எளிதில் கள்ள நோட்டுகளை தயாரிக்க முடியும் என்பதால், அதனை முறியடிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கரன்ஸிகளின் வடிவமைப்பை தயார் செய்ய இந்த 6 ஆண்டுகள் தாமதம் ஆகியுள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது புதிதாக அறிமுகப்படுத்த உள்ள கரன்ஸி நோட்டுகளை சூரிச் மண்டலத்தை சேர்ந்த பிரபல கிராஃபிக் கலைஞரான Manuela Pfrunder என்பவரின் வடிவமைப்பிற்கு தேசிய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள கரன்ஸி நோட்டுகளில் இருப்பது போன்ற சுவிஸ் நாட்டு பிரபலங்களின் படங்கள் புதிய கரன்ஸியில் இடம்பெறாது.
மாறாக, 50 பிராங்க் கரன்ஸியில் சுவிஸ் மலையில் சில நபர்கள் நடந்து செல்வது போலவும், மறுபுறம் சூரியன் இருப்பது போலவும் படங்கள் இடம்பெற்று இருக்கும்.
10 பிராங்க் கரன்ஸியில் சுவிஸின் பிரபல விளையாட்டான பனிச்சறுக்கு படம் இடம்பெற்று இருக்கும் என சுவிஸ் தேசிய வங்கி
தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக