பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார், அதன்பின் நவம்பரில் இறந்தார்.
இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது சடலம் அப்போது பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2006ல் ரஷ்ய உளவு துறையை சேர்ந்த அலெக்சாண்டர் லிட்வென்கோ, லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த போது காபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
அதேபோல் அராபத்துக்கும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அராபத் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அவரது உடலின் பல்வேறு உறுப்புகளை எடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், அறிவியல் அடிப்படையில் அராபத் இயற்கையாக நோய்வாய்பட்டு இறக்கவில்லை. அவரது உடலின் பல்வேறு உறுப்புகளில் பொலோனியம் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை பெற்றுக் கொண்ட பின், அராபத் மனைவி சுஹா பாரிசில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், எனது கணவருக்கு அரசியல் எதிரிகள் அதிகம், விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது.
இதற்காக நான் எந்த நாட்டையும், தனி நபர் யாரையும் குற்றவாளி என்று கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக