வியாழன், 28 நவம்பர், 2013

சுவிஸ் எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

ஜெனிவாவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது.
ஜெனிவாவை சேர்ந்த வேதற்போட் சர்வதேச எண்ணெய் நிறுவனம் 100 நாடுகளில் 55,000 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம் சில நாடுகளில் லஞ்சமளித்து ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
23 மில்லியன் டொலர்களை கடந்த 2003 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை ஈரானுக்கு வழங்கியுள்ளது. கியூபாவிற்கு 69 மில்லியன் டொலர்களை 2005 முதல் 2006 வரை வழங்கி 295,000 டொலர்கள் அளவில் வியாபாரம் நடத்தியுள்ளது.
மேலும் அரசாங்க நிறுவனங்களுக்கு 91 மில்லியன் லஞ்சம் வழங்கியுள்ளது போன்ற தகவல்கள் அம்பலமானது.

இதனை அறிந்த அமெரிக்க அரசு நிறுவனம் 250 மில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு 65.6 மில்லியன் டொலர்கள், குற்றவியல் தண்டனையாக 87.2 மில்லியன் டொலர்களை நீதிதுறைக்கு செலுத்தவேண்டும் என்றும் மீதமுள்ள அபராத பணத்தை வருமான வரித்துறை மற்றும் வணிகத்துறை பகிர்ந்துக் கொள்ளும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வேதற்போட் நிறுவனத்தின் தலைவர் பெர்நாட் டுரோக் டன்னர் (Bernard Duroc-Danner) கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில் முன்னணி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிலைநிறுத்தவே நாங்கள் எண்ணினோம் என்று கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.