புதன், 22 ஜூலை, 2015

காருக்குள் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: வெப்பத்தில் பரிதாப பலி

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் தனது 5 வயது குழந்தையை காரினுள் வைத்து பூட்டி சென்றதால், வெப்பம் தாங்காமல் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சுவிஸில் கடந்த சில காலமாக வெப்ப அலை (Heat wave) அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுவிஸில் உள்ள Ticino மாகாணத்தில் உள்ள Muzzano-வில், கடந்த செவ்வாய் கிழமையன்று தாயார் ஒருவர் தனது 5 வயது குழந்தையை காரில் தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார்.

அந்த நேரம் வெப்ப அலைகள் கடுமையாக வீசியதால், காருக்குள் இருந்த குழந்தை வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை இறந்துவிட்டது உறுதியானதால், மருத்துவ உதவியாளர்களால் எந்த உதவியும் செய்யமுடியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், என்ன காரணத்திற்காக அந்த பெண்மணி குழந்தையை காரில் தனியாக விட்டுச் சென்றார் என்பதை பற்றி பொலிசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Ticino மாகாணத்தை சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.

மேலும், செவ்வாய் கிழமை மதிய வேளையில் வெப்பத்தின் அளவு தீவிரமாக இருந்ததால், வானிலை சேவை மையம் 4ம் நிலை எச்சரிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ம் ஆண்டு யூலை மாதம் இருந்த சராசரி வெயிலின் அளவான 32.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தை விட இந்த மாதத்தின் முதல் 2 வாரங்களிலேயே அதிகளவு வெப்பம் பதிவாகி உள்ளதாக 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.