சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூசேன் மண்டலத்தில் உள்ள Stalten Ettiswil என்ற நகரிலிருந்து பயணிகள் பேருந்து Ruswil நகருக்கு கடந்த ஞாயிறு மாலை 4.45 மணியளவில் புறப்பட்டுள்ளது.
பேருந்து புறப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் வழித்தடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளது.
அப்போது, முகமூடி அணிந்தவாறு திடீரென பேருந்துக்குள் நுழைந்த இரண்டு நபர்கள் பயணிகளை நோக்கி சத்தம் எழுப்பாமல் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மரண பயத்தில் பயணிகள் உறைந்துள்ள நேரத்தில், இரண்டு நபர்களில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து ஓட்டுனர் தலையில் வைத்து மிரட்டியுள்ளான்.
எவ்வித சத்தமும் எழுப்பாமல் பணத்தை எடுக்குமாறு மிரட்டியுள்ளான். பீதியடைந்த ஓட்டுனரும் தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் கொள்ளையனிடம் அளித்துள்ளார்.
பின்னர், பயணிகளிடம் திரும்பி கொள்ளையர்கள், அவர்களிடமிருந்தும் பணத்தை கொள்ளையடித்து விட்டு Buttisholz நோக்கி தப்பியுள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் ஓட்டுனரும் பயணிகளும் புகார் அளித்துள்ளனர்.
கொள்ளையை நிகழ்த்திய நபர்கள் ஜேர்மனி மொழியில் பேசியதாகவும், இருவருக்கும் 15 முதல் 20 வயதிருக்கலாம் என ஓட்டுனர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார், துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக