திங்கள், 13 ஜூலை, 2015

குடியேற போகிறீர்களா? இந்த 10 வழிமுறைகளை பின்பற்றுங்கள்???

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேற உள்ள அல்லது அந்நாட்டிற்கு முதன்முதலாக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர்கள் சுவிஸ் மக்களுடன் இயல்பாகவும் அன்பாகவும் பழக தேவையான 10 வழிமுறைகளை சுவிஸ் உளவியல் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தாய்நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்த நாட்டின் பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பற்றி சிறிதாவது முன்கூட்டியே தெரிந்துக்கொள்வது அவசியம்.

இதன் அடிப்படையில், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேற விரும்பும் அல்லது அந்நாட்டிற்கு தற்காலிகமாக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர்கள் சுவிஸ் மக்களிடம் பழகும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய 10 வழிமுறைகளை ஜெனிவாவை சேர்ந்த பிரபல உளவியல் நிபுணரான Lawson-Botez வலியுறுத்தியுள்ளார்.

1. சுவிஸ் மொழியை கற்றுக்கொள்ளவும்

நீங்கள் எந்த நபரிடம் பேசினாலும் கூட, அவருடைய தாய்மொழியில் பேச தொடங்கினால் உங்கள் மீதான மரியாதை அவருக்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சுவிஸில் அலுவலக மொழிகளாக உள்ள ஜேர்மன், பிரெஞ்ச் மற்றும் இத்தாலி மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

சுவிஸில் உள்ள எந்த மண்டலத்தில் நீங்கள் குடியேறினாலும், அங்குள்ள ஜேர்மன், பிரெஞ்ச் மற்றும் இத்தாலி மொழிகளை கற்றுத்தரும் வகுப்புகளில் சேர்வது மிகச்சிறந்த வழியாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </.

2. விளையாட்டு கிளப்புகளில் சேரவும்

சுவிஸ் மக்களுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளதால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை விளையாட்டு கிளப்புகளில் உறுப்பினராக இருப்பவர்கள் அந்நாட்டில் அதிகம்.

எனவே, நீங்கள் தங்கியுள்ள பகுதியில் உள்ள விளையாட்டு கிளப்புகளில் நீங்களும் உறுப்பினராக இணைந்தால், அங்கு வரும் நபர்களுடன் பழகும் வாய்ப்பு மிக அதிகம்.

குறிப்பாக, டென்னிஸ் விளையாட்டு கிளப்புகளில் சேருவது அதிக பலனளிக்கும் என Lawson-Botez சுட்டிக்காட்டியுள்ளார்.

3. இரவு வகுப்புகளுக்கு செல்ல பழகுங்கள்

சுவிஸில் மாலை முதல் இரவு வரை பல வகையான வகுப்புகள் நடைப்பெறுகின்றன. உங்களுக்கு பிடித்தமான ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் உள்ளிட்ட பல திறமைகளை அந்நாட்டு மக்களுடன் இணைந்து வளர்த்துக்கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும்.

4. இரவு விருந்துகளில் கலந்துக்கொள்ளுங்கள்

சுவிஸில் உள்ள தேவாலயங்கள் அல்லது பொது இடங்களில் நடைபெறும் இரவு விருந்துகளில் ஆர்வமுடன் கலந்துக்கொள்ளலாம். உங்களுக்கு பழக்கமான நபர் இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்தால், அங்கு அவரது நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். இது உண்களுடைய நட்பு வட்டத்தை விரிவாக்கும்.

5. பிற துறைகளை சார்ந்த நபர்களிடம் பழகுங்கள்

நீங்கள் பணிசெய்யும் அல்லது உங்களுக்கு விருப்பமான துறை சார்ந்த நபர்களை அடுத்து, பிற துறைகளை சார்ந்த நபர்களிடம் பழக ஆரம்பித்தால் இரு தரப்பினரும் தங்கள் துறைகள் தொடர்பான தகவல்களை பரிமாரிக்கொள்ளும்போது நட்பு அதிகரிக்கும். இந்த வட்டத்தை விரிவாக்கி கொள்வதன் மூலம் நமது பொது அறிவும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

6. சக ஊழியரிடம் மனம் விட்டு பழகுங்கள்

சுவிஸில் நீங்கள் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டால், உங்கள் நிறுவனத்தில் உள்ள சக ஊழியர்களிடம் மனம் விட்டு பழக வேண்டும். நீங்கள் தனிமையில் இருப்பதாக கூறினாலும் கூட, அந்த சக ஊழியர் மூலம் நிறைய நண்பர்கள் சேர வாய்ப்பு உள்ளது.

7. நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்

சுவிஸில் பெரும்பாலான மக்கள் நவீன கால இணையதளங்கள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமே ஒவ்வொருவரிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதால், நீங்களும் தொழில்நுட்ப அறிவில் தேர்ந்தவராக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

8. தன்னார்வ சேவைகளில் ஈடுபடுங்கள்

பண்பாட்டு நிகழ்ச்சி அல்லது சமூக நல பணியாக இருந்தாலும் கூட, நீங்கள் அவற்றில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு உங்களால் முடிந்த சேவைகளை செய்யலாம். இது நிறைய நபர்களுடன் பழக வாய்ப்பு ஏற்படுத்துவதுடன், மொழிகளை கற்கவும் உதவும்.


9. வித்தியாசமாக சிந்தியுங்கள்

Think Out of the Box என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நீங்கள் எதை செய்தாலும் அதனை பிற நபர்களை விட வித்தியாசமாகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்திலும் செய்ய வேண்டும். இது உங்கள் மீதான மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

10. இறுதியாக, நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்

சுவிஸில் தங்கியுள்ள நாட்களில் பல வகையான நபர்களை சந்தித்து இருந்தாலும் கூட, உங்களுடைய நண்பர்களுக்கென தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுக்கு முக்கியத்துவத்தை அளியுங்கள். இணையத்தளங்கள் மூலமாக தவறான காதலன் அல்லது காதலி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு நேரத்தை செலவிடாமல், உங்களுக்காக இருக்கும் நண்பர்களிடம் அன்பாக பழகி வந்தால், அந்த உறவு என்றென்றும் நீடித்து இருக்கும்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>> இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.