வெள்ளி, 26 ஜூன், 2015

குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளிதபெண் பரிதாபமாகஉயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாடின்றி ஓடிய குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Vaud மண்டலத்தில் உள்ள Noville என்ற நகரில் தம்பதிகள் இருவர் குதிரையேற்றம் பள்ளி ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வந்துள்ளனர்.
பள்ளியின் உரிமையாளரின் 56 வயதுடைய மனைவி கடந்த செவ்வாய்கிழமை மாலை வேளையில் குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த உயரமான மர கட்டையை குதிரை வேகமாக வந்து தாண்ட வேண்டும்.
இந்நிலையில், குதிரையில் அமர்ந்து பயிற்சி அளித்துக்கொண்டிருந்த சமயத்தில் அசுர வேகத்தில் வந்த குதிரை ஒரு மர கட்டைக்கு முன்னர் நிலை தடுமாறியுள்ளது.
அப்போது, எதிர்பாராத கண நேரத்தில் தனது முதுகில் அமர்ந்திருந்த பெண் பயிற்சியாளரை குதிரை தூக்கி வீசியுள்ளது.
இந்த விபத்தில் தலைகீழாக விழுந்த அந்த பெண்ணின் தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது.
இந்த காட்சியை கண்ட சக ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர்.
மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக
 தெரிவித்தனர்.
பெண் பயிற்சியாளர் தலையில் கவசம் அணிந்திருந்தும், அதனையும் மீறி அவரது தலை தரையில் பலமாக மோதியதின் விளைவாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேசிய அந்த பள்ளியின் 
ஊழியர்கள், இங்குள்ள குதிரைகளின் ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் அந்த பெண் நன்கு அறிவார்.
மிகுந்த அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரான அவர்,
 இதுபோன்ற ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கி இறந்துள்ளது இப்பள்ளிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.