வெள்ளி, 26 ஜூன், 2015

கவனம்?விமான டிக்கெட் பதிவு செய்பவர்க்கு ? எச்சரிக்கை???

மோசடி கும்பல்கள் அதிகரித்து வருவதால் இணையதளங்கள் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் இணையத்தளம் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்தால், இலவசமாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் அல்லது கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைக்கும் என்று வரும் எஸ்.எம்.எஸ்களை நம்பி பல நபர்கள் ஏமாந்துள்ளனர்.
இதே போல், சுவிஸில் உள்ள சூரிச் மண்டல பொலிசாருக்கு அண்மையில் புகார் ஒன்று வந்துள்ளது.
புகார் அளித்த 6 நபர்களுக்கும் இணையத்தள நிறுவனம் ஒன்று ‘தங்களிடம் டிக்கெட் பதிவு செய்தால் கோசோவோ நாட்டில் உள்ள Pristina நகருக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர்கள், அந்த இணையத்தளத்தில் தங்களுடைய வங்கி கணக்கு எண்களை தெரிவித்து டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
அவர்களுடைய கணக்குகளிலிருந்து ஆயிரக்கணக்கான பிராங்குகள் தான் போனதே தவிர அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் எதுவும் வரவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சூரிச் மண்டல பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பணத்தை ஏமாற்றிய நிறுவனம் அவர்களிடம் அதனை திருப்பி செலுத்தி விட்டது.
இந்த மோசடி குறித்து பேசிய பொலிசார், விமான டிக்கெட்டுகள் பதிவு செய்பவர்கள் தங்களுக்கு கைப்பேசியில் வரும் எஸ்.எம்.எஸ் தொடர்பாக எப்போதும் உஷாராக செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், வாடிக்கையாளர்கள் சிரமம் பார்க்காமல், குறிப்பிட்ட விமான நிறுவனத்திலோ அல்லது நம்பிக்கைக்கு உரிய தனியார் பயண நிறுவனங்களிடம் நேரடியாக விமான டிக்கெட்டுகளை பதிவு செய்வது அவசியம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.