சுவிட்சர்லாந்து நாட்டில் ஜோடி இருவர் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் செல்லமாக தாக்கி கொண்டதில் உணர்ச்சி வசப்பட்ட காதலன் தனது காதலியை தோசைக் கல்லால் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரில் 40 வயதான நபர் ஒருவர் தனது 39 வயதான காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
ஜோடி இருவருக்கும் மது மற்றும் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு மே 17ம் திகதி இரவு வேளையில், இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் செல்லமாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
மது போதை தலைக்கேறிய காதலன், தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் சமையல் அறையில் இருந்த தோசைக்கல்லை எடுத்து காதலியின் முகத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து
தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மிக ஆச்சர்யம் அளிக்கும் விதத்தில் இருவரும் குளித்துவிட்டு படுக்கையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர், இருவரும் தூங்கிவிட்ட நிலையில், அதிகாலையில் காதலன் படுக்கையில் இருந்து எழுந்து பார்க்கையில், அவரது காதலி அசராமல் படுக்கையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காதலியின் காது வழியாக ரத்தம் வழிந்த நிலையில் இருந்ததை கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
காதலி இறந்ததை உறுதி செய்த பொலிசார் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நபர் மீதான் வழக்கு விசாரணை நேற்று ஜேனிவா நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
காதலனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞ்சர், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் திட்டமிட்டு இந்த கொலையை செய்யவில்லை. சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததால் நடந்தது எதுவும் அவரது சுயநினைவில் நிகழவில்லை என வாதாடியுள்ளார்.
இருப்பினும், கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள காதலன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்துக்கொண்ட காரணத்திற்காக ஏற்கனவே ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
எனவே, முழுமையான விசாரணைக்கு பிறகு தான் அவர் கொலையாளியா இல்லையா என்பது தெரியவரும் என உயிரிழந்த பெண்ணின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் நீதிபதியுடன்முறையிட்டுள்ளார்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக