சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ பயிற்சி நடைபெற்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சக்கரத்தில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மண்டலத்தில் உள்ள Hauenstein என்ற பகுதியில் நேற்று இரவு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது.
ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில், ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு காரில் வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வேகமாக பின்னோக்கி சென்றுள்ளது.
காருக்கு பின்னால் சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் இதனை எதிர்பாராமல் அங்கிருந்து விலகி ஓட முயற்சித்துள்ளார்.
ஆனால், கணப்பொழுதில் பின்னோக்கி வந்த அந்த கார் வீரரின் மீது ஏறியுள்ளது. காரின் சக்கரத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்தை தொடர்ந்து மருத்துவ குழுவினருக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் வருவதற்கு முன்பாகவே சில நிமிடங்களில் படுகாயமடைந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணுவ பயிற்சியின்போது வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக