ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை : துரத்தி சென்று கைது செய்த பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை  ஒன்றில் அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தி சென்ற கார் ஓட்டுனரை பொலிசார் விரட்டி சென்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Wildegg என்ற நகர்புற சாலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் 53 வயதான நபர் ஒருவர் மெர்சிடஸ் காரில் பயணம் செய்துள்ளார்.

4 சாலைகளை இணைக்கும் மைத்திற்கு கார் பின்புறமாக சென்றபோது மற்றொரு வாகனம் மீது மோதியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து பொலிசார் அந்த இடத்திற்கு வந்தபோது அவர்களிடம் பிடிபடாமல் அங்கிருந்து காருடன் தப்பியுள்ளார்.

நபரை பிடிக்க பொலிசார் பின்னால் துரத்தியபோது, சில நிமிடங்களில் Rupperswil என்ற பகுதியை அடைந்த மெர்சிடஸ் கார் அங்கும் ஒரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கு பிறகும் காரை நிறுத்தாத அந்த நபர், சாலையில் சென்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் தொடர்ந்து காரை தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.

நிலமையை உணர்ந்த பொலிசார், அவ்வழியில் உள்ள அனைத்து பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு, Pipe Aarau என்ற பகுதிக்கு வந்த அந்த காரை பொலிசார் மடக்கி பிடித்தனர்.

உடனடியாக ஓட்டுனரை கைது செய்த பொலிசார் அவரிடம் இருந்த ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றினர். மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்கியுள்ளாரா என்பது குறித்து அறிந்துக்கொள்ள அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக இன்று பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், விபத்து குறித்து விரிவான தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.