சுவிட்சர்லாந்து நாட்டில் வயதான மூதாட்டி மீது மோகம் கொண்ட மர்ம நபர் ஒருவர், மூதாட்டி சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேசல் மண்டலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் Barfusserplatz என்ற நகரிலிருந்து ட்ராம் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
பேருந்தில் அவர் நின்றிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த நபர் ஒருவர், மூதாட்டியின் உடலில் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளார்.
நபரின் நடவடிக்கையை கண்டித்த மூதாட்டி, சிறிது நேரத்திற்கு பிறகு Zoo Bachletten என்ற பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அதே நபர், சாலையில் மூதாட்டி நடந்து சென்றபோது பின்புறமாக வந்து கட்டி அணைத்து சித்ரவதை செய்துள்ளார்.
நபரின் செய்கைகளால் எரிச்சலடைந்த மூதாட்டி, சரமாரியாக கத்தி கூச்சலிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின்னர், Tiergartenrain என்ற பகுதியில் இருந்த தனது வீட்டிற்குள் நுழைய முற்சித்தபோது அதே நபர் திடீரென அங்கு வந்த மூதாட்டியை வாசற்படியிலேயே கீழே தள்ளி அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.
தொடர்ந்து வந்து பாலியல் துன்புறுத்தல் செய்த நபரால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, பலமாக குரல் எழுப்பி உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார்.
சில நிமிட போராட்டத்திற்கு பிறகு, அங்கு ஆட்கள் வந்ததால் மூதாட்டியை விட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடி விடுகிறார்.
பட்டப்பகலில் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பற்றி பொலிசாரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
30 முதல் 35 வயதிற்குள் இருக்கும் அந்த நபர் குறித்து தகவல்களை சேகரித்த பொலிசார், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக