ஞாயிறு, 20 மார்ச், 2016

என்றும் இலாத சோதனைகள் சுவிஸில் அதிகரிப்பு !

சுவிட்சர்லாந்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் புலனாய்வு துறை அலுவலகம்(FIS) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் கடந்த 5 ஆண்டுகளில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக
 தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மட்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்தில் 2 பேரை பொலிசார் கைது செய்தனர்.
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக கடந்த 2011ம் ஆண்டு 3,50,000 பொதுமக்களை பொலிசார் சோதனை செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது 2015ம் ஆண்டு 20,00,000 லட்சமாக அதிகரித்து புலனாய்வு அதிகாரிகளை கவலையில் 
ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம், சுவிஸில் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது புலனாய்வு துறை அதிகாரிகளின் சந்தேக வட்டத்தில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் சுவிஸில் புகலிடம் என்ற போர்வையில் இங்கு தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
சுவிஸில் மோசமான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்த 3 ஈராக் நாட்டை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சுவிஸ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ள இந்த நிலையில் வெளியாகியுள்ள இப்புள்ளிவிபரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.