வெள்ளி, 4 மார்ச், 2016

சுவிஸ் மருத்துவமனையில் தற்கொலைக்கு அனுமதி !!!

சுவிட்சர்லாந்தில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் அதிகாரபூர்வ தற்கொலைக்கு அனுமதி அளிக்கப்படும் என மருத்துவமனை ஒன்று அறிவித்துள்ளது.
சுவிட்சர்லந்தில் சட்டத்திற்கு உட்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் வசதி இருந்து வருகிறது, அதுவும் குறிப்பிட்ட மையங்கலில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
அதிக கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், உலகெங்கிலும் இருந்தும் இந்த மையங்களை நாடி பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் வாலெய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்று அதிரடி அறிவிப்பை 
வெளியிட்டுள்ளது.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் மருத்துவமனையிலேயே சட்டத்திற்கு உட்பட்டு தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்கப்படும் 
எனவும்,
குறிப்பாக நோயாளிகளால் மருத்துவமனையில் இருந்து தன்னிச்சையாக செல்ல முடியாதபோது இந்த வசதியை கோரிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தல்லம் எனவும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற கோரிக்கையை நோயாளிகள் முன்வைத்தால் அதை தீவிர ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்னரே முடிவு 
அறிவிக்கப்படும்.
மேலும், சுவிஸ் சட்டத்திட்டத்தின்படி இதற்கெனவே பயிற்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,
கண்டிப்பாக அந்த மருத்துவமனை ஊழியர்கள் இந்த சேவைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் உள்ளார்ந்த நோக்கம் என்பது நாடிவரும் நோயாளிகளை அரவணைத்து நோய் தீர்த்து அனுப்புதல் என்பதே,
அதிகாரபூர் தற்கொலைக்கு துணைபோதல் என்பது நோயாளிகள் மீதுள்ள அக்கறை அல்ல எனவும் அங்குள்ள மருத்துவர்கள்
 தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக சுவிஸ் நாட்டில் இதுபோன்ற தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக 780 நபர்கள் இந்த தற்கொலை மையங்களில் அனுமதிக்கப்பட்டு
 உயிர்விட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.