செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

அத்துமீறிய நடன ஆசிரியர்: 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

சுவிட்சர்லாந்து நாட்டில் 13 வயது சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட நடன ஆசிரியருக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் கடுமையான தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது.
சுவிஸின் ஃபிரிபோர்க் மற்றும் வாட் மாகாணங்களுக்கு இடைப்பட்ட ப்ரோய் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் 
நிகழ்ந்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு பெயர் வெளியிடப்படாத நடன ஆசிரியர் ஒருவர் தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீடு ஒன்றில் குடியேறியுள்ளார்.
இந்த வீட்டில் 13 வயதில் ஒரு சிறுமி வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்கும் நடன ஆசிரியருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் 2001-ல் இருந்து 2003ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுப்பது, அந்தரங்க உறுப்புகளை தீண்டுவது என எல்லை மீறி செயல்பட்டுள்ளார்.
நடன ஆசிரியரின் இந்த அத்து மீறல்கள் தொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது அந்த நடன ஆசிரியருக்கு 55 வயதும் சிறுமியாக இருந்தவருக்கு 28 வயதும் நிரம்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்துள்ளது. அப்போது, சிறுமியின் ஒப்புதலின் அடிப்படையில் தான் இவ்வாறு நடந்துக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், 13 வயதில் உள்ள ஒரு சிறுமியை பலவந்தமாக பாலியல் விவகாரங்களில் ஈடுபடுத்தியது மன்னிக்க முடியாது குற்றம். இவை அனைத்தையும் பொலிசார் உறுதி
 செய்துள்ளனர்.
எனவே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடன ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு 
தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.