வியாழன், 4 பிப்ரவரி, 2016

முடித்திருத்தும் தொழிலாளியிடம் கொள்ளை: தடுக்க வந்த பொலிசாருக்கு கத்திக்குத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் தொழியாளியை தாக்கி கொள்ளையிடும்போது தடுக்க வந்த 3 பொலிசாரையும் தனி ஒருவனாக எதிர்த்து தாக்கிய கொள்ளையனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Zeughausstrasse என்ற பகுதியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள முடித்திருத்தும் சலூன் கடை ஒன்றிற்கு நேற்று 22 வயதான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 
வந்துள்ளார்.
சலூன் கடைக்குள் நுழைந்ததும், அங்குள்ள Ibrahim Fatah என்ற உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளரை பலமாக கத்தியால் தாக்கியுள்ளார்.
இருவரையும் தாக்கிய கொள்ளையன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளான். இந்த தாக்குதல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைவில் வந்து 
சேர்ந்துள்ளனர்.
இரு புறங்களிலும் வந்த 3 பொலிசார் கொள்ளையனை வழிமறைத்து நின்றுள்ளனர். சூழலை அறிந்த கொள்ளையன் கத்தியை காட்டி பொலிசாரை மிரட்டியுள்ளான்.
துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பொலிசார் கொள்ளையனை நெருங்கியுள்ளனர். அப்போது, திடீரென பொலிசார் ஒருவர் மீது கொள்ளையன் பாய்ந்து அவரிடம் இருந்த துப்பாக்கியை 
பறித்துள்ளான்.
சற்றும் எதிர்பாராத 3 பொலிசாரும் கொள்ளையனின் கை, கால்களை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கொள்ளையனுடன் இருந்த அவரது சகோதரியையும் பொலிசர் கைது செய்தனர்.
கொள்ளையனிடம் ஏற்பட்ட சண்டையில் 3 பொலிசாருக்கும் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சலூன் கடை உரிமையாளர் பேசியபோது, ‘எங்கள் மீது தாக்குதல் நடத்திய இதே நபர் கடந்த செவ்வாய்கிழமை கடைக்கு வந்து முன்னோட்டம் பார்த்துள்ளார்.
பின்னர், சலூன் கடையின் சூழலை நன்கு ஆராய்ந்துவிட்டு மீண்டும் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.