வியாழன், 4 பிப்ரவரி, 2016

இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்?

சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்நாட்டு சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர்களை உடனடியாக நாடுகடத்தும் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பாக சுவிஸ் மக்கள் கட்சி எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வாக்கெடுப்பு 
நடத்தவுள்ளது.
இந்த வாக்கெடுப்பு குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்நாட்டு சட்ட அமைச்சரான Simonetta Sommaruga கடந்த செவ்வாய்கிழமை நேரடியாக பதில் அளித்துள்ளார்.
அப்போது, பொதுமக்களில் ஒருவர் ‘குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் உள்ளிட்ட இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அமைச்சர் பதிலளித்தபோது, ‘புதிதாக அமுலாக்கவுள்ள இந்த சட்டம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தனி விதிமுறைகளை பின்பற்றாது.
குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எந்த வயதாக இருந்தாலும், அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு 
வெளியேற்றப்படுவார்கள்.
இதே நிகழ்ச்சியில் சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான Heinz Brand என்பவரும் பங்கேற்றுள்ளார்.
’குற்றத்தில் ஈடுப்பட்ட ஒரு இளைஞரை நாட்டை விட்டு வெளியேற்றினால், அவரை பிரிந்து அவரது குடும்பத்தினர் எப்படி சுவிஸில் தங்கியிருக்க முடியும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
’இந்த நடவடிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இளைஞரை விட்டு பிரிய முடியாது என்றால், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அந்த இளைஞருடன் தாய்நாட்டிற்கு திரும்பலாம்’ என பதிலளித்துள்ளார்.
எனினும், சுவிஸ் சட்ட அமைச்சகம் இந்த நடவடிக்கைக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, சில குற்றங்களுக்காக இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு எதிரானது.
எனவே, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சட்ட சிக்கல்கள் ஏற்படும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.