புதன், 9 மார்ச், 2016

அதிரடியாக கொள்ளையனை பிடிக்க செயல்பட்ட பொலிஸ் நாய்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையை தடுக்க வந்த பொலிசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை பொலிஸ் நாய் விரட்டி சென்று மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ன் நகரில் உள்ள Pappelweg என்ற பகுதியில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் வந்துள்ளது.
தங்களது குடியிருப்பிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளதாக தகவல் 
அளித்துள்ளனர்.
தகவலை பெற்ற பொலிசார் இரண்டரை வயதான ஜேர்மன் ஷெபார்ட் வகை பொலிஸ் நாயுடன் விரைந்து சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த வீட்டை அடைந்தவுடன், பொலிசாரை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்ப ஓட முயன்றுள்ளான்.
ஆனால், பொலிசார் ஒருவர் கொள்ளையனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் பொலிசாரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான்.
இதனை தூரத்தில் இருந்து பார்த்த அந்த பொலிசார் நாய் பாய்ந்து சென்று கொள்ளையனை தடுத்து அவனை மேலும் நகர விடமால்
 மடக்கியுள்ளது.
அச்சத்தில் உறைந்த கொள்ளையன் ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியமால் திணறியுள்ளான். பின்னால் வந்த பொலிசார் அந்த கொள்ளையனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட பொலிசார், ‘கொள்ளையனை பிடிக்க பொலிஸ் நாய் பெரிதும் உதவி செய்துள்ளது. தற்போது பொலிசாரின் பிடியில் உள்ள 39 வயதான அந்த கொள்ளையன் மீது விசாரணை நடைபெற்று வருவதாக
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.