புதன், 9 மார்ச், 2016

பயங்கரமாகரயில் மீது மோதிய சொகுசு கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில் மீது ஆடம்பரமான கார் ஒன்று மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் காரில் இருந்த பெண் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சுவிஸின் சொலூதுர்ன் மாகாணத்தில் உள்ள Flumenthal என்ற நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது.
(திங்கள் கிழமை) காலை 8 மணியளவில் பெண் ஒருவர் சொகுசு கார் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் ரயில் தண்டவாளத்தில் மீது ஏறி கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.
காரை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுனர் காருக்குள் அமர்ந்திருந்தவாறு அலறியுள்ளார்.
சில மீற்றர்கள் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட அந்த கார் எதிரே நின்றுருந்த ரயில் மீதும் அருகில் இருந்த ஒரு இரும்பி கம்பியின் மீதும் பலமாக மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில் கார் அப்பளமாக நொருங்கிய நிலையிலும், காருக்குள் பெண் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்தை கண்ட ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து காரில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
உடனடியாக அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் சுமார் 10,000 பிராங்க் மதிப்பிலான சேதாரம் ஏற்பட்டிருக்கும் என விசாரணை அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.