புதன், 16 மார்ச், 2016

மாணவியை பழிவாங்க திட்டமிட்ட மாணவன்: நிகழ்ந்த விபரீதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலை ஏற்க மறுத்த மாணவியை பழிவாங்குவதற்காக மாணவன் அரங்கேற்றிய நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Ostschweizer பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் பெயர் வெளியிடப்படாத 18 வயது மாணவன் மற்றும் 16 வயது மாணவி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பள்ளி சுற்றுலா தொடர்பாக ஜேர்மனி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Weimar என்ற நகரில் மாணவர்கள் அனைவரும் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
ஓர் இரவு வேளையில் 18 வயதான மாணவன், அவரது நண்பன் மற்றும் 16 வயதான அந்த மாணவியும் அளவுக்கு அதிகமாக மது மற்றும் போதை மருந்தை எடுத்துள்ளனர்.
சுயநினைவை இழந்த அந்த மாணவி மயங்கி விழுந்து விடுகிறார். மறுநாள் எழுந்திருக்கும்போது அவர் அருகில் 18 வயதான மாணவனின் நண்பன் உறங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி 
அடைந்துள்ளார்.
அப்போது, ‘இரவு நேரத்தில் என்னுடைய நண்பன் உன்னை கற்பழித்து விட்டான். நீ கர்ப்பம் ஆக கூடாது என்பதற்காக மாத்திரையையும் உனக்கு கொடுத்துள்ளான்’ என கூறியுள்ளான்
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். நடந்தவை அனைத்தும் உண்மையா என தெரிந்துக்கொள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொள்ள அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், ’இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் கூறுங்கள்’ என அறிவுரை கூறி மருத்துவர்கள் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மாணவியும் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிசாரின் விசாரணையில் தான் அனைத்து நாடகமும் வெளிச்சமாகியுள்ளது.
இது குறித்து பொலிசார் கூறியபோது, ‘மது குடித்துவிட்டு மயங்கிய மாணவியை கற்பழித்து விட்டதாக இருவரும் 
பொய் கூறியுள்ளனர்.
மாணவிக்கு கொடுத்ததும் சாதாரண மாத்திரை தான். மாணவனின் காதலை மாணவி ஏற்க மறுத்ததால் அவரை அவமானப்படுத்தி பழிவாங்குவதற்காக’ இரண்டு மாணவர்களும் நாடகமாடியதை 
ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.