சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இரண்டு மாகாணங்களை சேர்ந்த சுமார் 150 வீடுகளில் தொடர்ச்சியாக புகுந்து கொள்ளையடித்து வந்த திருடனை பொலிசார் அதிரடியாக கைது
செய்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் முதல் திருடன் ஒருவன் பொலிசாருக்கு பெரும் சவாலாக விளங்கி வந்துள்ளான்.
ஆர்கவ் மற்றும் லூசெர்ன் மாகாணங்களில் இந்த திருடனின் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில், இரண்டு மாகாணங்களில் உள்ள 150 வீடுகளுக்கு மேல் அந்த திருடன் தனது கைவரிசையை காட்டியிருப்பது தெரியவந்தது.
ஒவ்வொரு வீட்டிலும், ரொக்கப்பணம் மற்றும் லட்சக்கணக்கான பிராங்க் மதிப்புள்ள நகைகளையும் திருடியது பொலிசாரை திணரவைத்துள்ளது.
திருடனை பிடிக்க அதிரடி வியூகம் வகுத்த பொலிசார், சில வாரங்களுக்கு முன்னர் அந்த பலே திருடனை கைது செய்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் பெயர் வெளியிடப்படாத திருடன் தொடர்பான தகவல்களை நேற்று முதன் முறையாக பொலிசார்
வெளியிட்டுள்ளனர்.
24 வயதான அந்த திருடன் அல்பேனியா நாட்டை சேர்ந்தவன் என்றும், தனியான இருக்கும் குடும்ப வீடுகளை மட்டுமே குறி வைத்து திருடுவது அவனது வழக்கம் என்றும் பொலிசார் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
திருடன் மீதான குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக