செவ்வாய், 4 அக்டோபர், 2016

இலங்கை தமிழர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல்!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதால் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுவிஸில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என சுவிஸ் அரசு கடந்த யூலை மாதம் அறிவித்தது.
ஆனால், புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும்போது அவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சுவிஸ் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சுவிஸில் தற்போது இலங்கையை சேர்ந்த சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் புகலிடம் 
வழங்கப்படவில்லை.
இவ்வாறு புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga அடுத்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது சுவிஸில் தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாகவும், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.