ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு சுவிஸில் அடையாள அட்டை

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து இல்லாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரப்பகுதியில்தான் இவர்கள் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையை வழங்குவதற்கு பேர்ண் நகர நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் பேர்ண் நகரில் வாழ்பவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று பேர்ண் நகரத்தின் மேற்குப்பகுதியின் ஒரு பிரிவான பெத்லகேமில் நடைபெற்றது.
பேர்ண் நகரில் வாழும் ஒருவர் எந்த வகையான வதிவிட அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தாலும், வதிவிட
 அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டாலும் இந்த அடையாள அட்டையானது அவர்களுக்கு வழங்கப்படும் போது வதிவிட அனுமதிப்பத்திரங்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. இதற்கமைய பேர்ண் நகரில் வாழும் அனைவரிற்கும் இந்த நன்மை கிடைக்கவுள்ளது.
அத்துடன் இந்த நகரில் புலம்பெயர்வாழ் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.இந்த அடையாள அட்டைகளைப் பயனபடுத்தி அனைவரும் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் வங்கிக்கணக்குகளை ஆரம்பிக்கலாம். தொலைபேசி ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கும் ஏனைய தேவைகளுக்கும்
 பயன்படுத்தலாம்.
அடையாள அட்டை தொடர்பாக கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் எப்போது எங்கே வழங்கப்படும் என்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.
இவ் அடையாள அட்டைகளுக்கு பேர்ண் நகரப்பகுதி நிர்வாகம் பொறுப்பாக இருக்கும். இது சுவிற்சர்லாந்தில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட 
உள்ள திட்டமாகும்.
இதன்மூலம் சுவிஸில் அகதி அந்தஸ்து கிடைக்காதவர்களுக்கு இந்த அட்டைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக 
காணப்படுகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.