முதன் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்டுனர் இல்லாத சிறிய ரக பயணிகள் பேருந்து சாலையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sion என்ற நகரில் தான் இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
மஞ்சள் நிறத்தில் இருக்கும் PostBus என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 11 இருக்கைகள் உள்ளன.
மின்சாரத்தால் இயங்கும் இந்த பேருந்து மணிக்கு 20 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமைகளில் பிற்பகல் நேரத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
இதில் பயணம் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. தானாக சாலையில் பயணிப்பது மட்டுமில்லாமல், சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து குறியீடுகளையும் நன்கு பதிவு செய்து பயணிக்கும்.
இந்த பேருந்து ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்டாலும், இதில் ஒரு ஓட்டுனர் எப்போதும் இருப்பார். பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர் வாகனத்தை உடனடியாக நிறுத்திவிடுவார்.
இதுமட்டுமில்லாமல், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், தூரத்தில் இருந்துக்கூட இதனை ரிமோட் மூலம் நிறுத்தி விடலாம்.
குளிர்சாதனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஓட்டுனர் இல்லாத இந்த பேருந்தின் சோதனை ஓட்டம் எதிர்வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக