செவ்வாய், 11 ஜனவரி, 2022

தனது அதீத திறமையால் சுவிசில் பலரால் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்

சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.அந்தத் தனித்துவமான
 உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக நிலைத்து நிற்பவர் எமது கூர் மாநிலத்தின் கண்ணன் எல்லோராலும் அழைக்கப் படும்
 (Kailainathan Thiyagarajah)
இங்குள்ள உணவகத்தில் உணவு பரிமாற்றம் என்பது, ஒரு மருத்துவருக்கு நிகரான பொறுப்புணர்வோடும், அழகியற் கலைஞனுக்கே உரிய கற்பனைவளத்துடனும் மேற்கொள்ள வேண்டியது
.அந்த அரிய பணியை ஆற்றும் கலைஞனை, தமது ஆண்டு மலரில் கௌரவித்திருக்கிறது Glacier 
திசாலனின் 31ம் நாள் புண்ணியாகவசனம், நாமகரண
 கிரிகைகளில் எம்முடன் இருந்தவாறே தொலைபேசி வழியாக பணிக்கான ஆயத்தங்களை உதவியாளருக்குச் சொல்லிக் கொண்டிருந்த கண்ணனைக் 
காணும்போதே,
அவனது பணிமீதான காதலும், கடமை உணர்வும், உயர்வுகளைத் தரும் என்பது புரிந்தது. என்பதுடன் கண்ணனை பலரும் பாராட்டி 
வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>







ஞாயிறு, 6 ஜூன், 2021

தமிழ்ப் பாடநூல்கள் சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வு

தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால்  5.6.2021அன்று .. சனிக்கிழமை 
தமிழீழத்தில்
இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க் கல்வியின் மேம்பாட்டுக்காக, புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி 
ஆற்றலை இலகுவாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் புதிய தமிழ்ப் பாடநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சுவிட்சர்லாந்திலும் பரவியது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில்
கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,உருமாற்றம் அடைந்து மேலும் தீவிரம் அடைந்துள்ளது.  இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.
அதே போல் தென் ஆப்பிரிக்கா,பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் இருமுறை உருமாறிய பி.1.617- என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சுகாதார அமைப்புகள் 
தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் சுவிட்சர்லாந்து நாட்டில் பரவி உள்ளதாக அந்த நாட்டு பொது சுகாதார ஆணையம் 
தெரிவித்து உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு  இந்தியாவின் உருமாறிய வைரஸ்  இருந்துள்ளது.
அவரது ரத்த மாதிரிகளை கடந்த மாதம் சேகரித்து ஆய்வு செய்ததில் அவருக்கு இந்தியாவின் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் கண்டறியப்பட்ட பயணி, ஐரோப்பிய நாடு வழியாக சுவிட்சர்லாந்துக்கு விமானம் மூலமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அதுபோன்று சுவிட்சர்லாந்தும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சுவிட்சர்லாந்தின் பயண தடை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 5 மார்ச், 2021

சுவிசில் ஓவியத்தினால் ஈழத்தமிழரின் அவலநிலையை உலகறிச் செய்த தமிழ்ச் சிறுமி

மிக அண்மையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமியொருவர் வரைந்த ஓவியம் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர்க் காவியமாய் உள்ள எம் புலத்து இளையோரே! எம் இனத்தின் வலி சொல்ல 
இதுவும் ஒரு வழியே..
ஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் தேசத்திலுள்ள 
வங்கியொன்று தனது
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்திரியாவின் தலைநகரில் நடத்தியது.இதில், சுவிஸ் தேசத்தில் வாழும் சுமார் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.
இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த 
அனுபவத்தை
 ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் விதிமுறையாகும்.இதில், ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த எங்கள் ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஓவியமொன்றை வரைந்தாள்.
ஒரு ஓவியம் தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய் ஓவியமாக்கியவள் எங்கள் தமிழ்மகள் அபிர்சனா தயாளகுரு ஆவார்.சாதாரண வெற்றியுடன் நின்று விடாமல், முதலாம்
 பரிசினைத் தனதாக்கினாள் இவள்.மனதைப்பிழிந்த வலியை ஓவியமாக வரைந்தாள் இவள்.உங்கள் தமிழ் மகளே அபிர்சனா.. உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லை
புலத்தில் வாழும் ஈழத்து இளையோரே..வரலாற்றைப் படிப்பதுடன் நின்று விடாமல், புலம்பெயர் தேசங்களிலும் தமிழனின் அவலங்களை எடுத்துச் சென்று புதிய வரலாற்றைப் படையுங்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>





ஞாயிறு, 17 ஜனவரி, 2021

யாழில் கொரோனா பரபரப்பைக் கிளப்பிய சுவிஸ் போதகர் சற்குணம் மரணம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா.17-01-2021.இன்று  சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன. 
சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த 
சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். 
இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 24 நவம்பர், 2020

கொவிட்-19 தொற்றினால் சுவிசில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் இதுவரை நான்காயிரத்து 222பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 751பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166பேர் 
உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 89ஆயிரத்து 430பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 522பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 700பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு
 திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 21 மார்ச், 2020

இலங்கைக்கு சுவிஸிலிருந்து வந்த தலைமை போதகருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 
அதாவது  15,03,20, ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை.
வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார்.
தற்போது அவருக்கு கொறோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவிஸ் 
நாட்டில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
எனவே தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக மருத்துவ
 பரிசோதனைக்கு செல்ல வேண்டும். தனிமை படுத்தபட வேண்டும். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.