சுவிட்சர்லாந்துக்குச் செல்கிறீர்களா? கவனம்! காதல் பெயரில் அங்கு மோசடிகள் நிலவுகின்றன என எச்சரிக்கின்றன சில நாடுகள்.
அமெரிக்கா
ஏராளமான அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
அமெரிக்க அரசு, சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் தங்கள் குடிமக்களை சுவிட்சர்லாந்தைக் குறித்து சில விடயங்கள் தொடர்பில் எச்சரிக்கிறது. சுவிஸ் மக்கள் நாகரீகமானவர்கள்தான்,
ஆனால், சகஜமாக பழகுவதில்லை என்றும், பாதசாரிகள் நடக்கும் நடைபாதைகள் மிகவும் குறுகலாக இருக்கும், ஆகவே, கவனம் தேவை என்றும் அமெரிக்கா தன் மக்களுக்கு கூறுகிறது.
நீங்கள் கீழே விழுந்து கையைக் காலை உடைத்துக்கொண்டாலோ, உணவில் கிருமிகள் இருந்து அதனால் நீங்கள் நோய்வாய்ப்பட்டாலோ அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் உங்களுக்கு பணம் கொடுக்காது என்கிறது
அமெரிக்க அரசு.
அத்துடன், சுவிட்சர்லாந்தில் நீங்கள் மருத்துவரைப் பார்க்கச் சென்றால் பெரும்பாலும் ரொக்கமாகத்தான் பணம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
பிரித்தானியா
சுவிட்சர்லாந்தில் 10 இடங்களுக்கு நீங்கள் சென்றால், அதிக உயரத்துக்குச் செல்வதால் ஏற்படும் altitude sickness என்னும் பிரச்சினையால் பாதிக்கப்படலாம் என்கிறது சுவிஸ் அரசு.
அதிக அளவில் சின்னச்சின்ன திருட்டுகள், குறிப்பாக ஜெனீவா விமான நிலையம், ஜெனீவா ரயில்களில் நடக்கும் எனவும் எச்சரிக்கிறது
பிரித்தானிய அரசு.
பையை பிடுங்கிச் செல்வோர், பிக்பாக்கெட் அடிப்போர் குறித்தும் முகத்தை மூடும் பர்தா அணிவது குறித்தும் உள்ளூர் விதிகளை கவனித்து நடந்துகொள்ளவேண்டும் என்றும் பிரித்தானியா
எச்சரித்துள்ளது.
சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோர், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் காப்பீட்டு நிறுவனம் அதற்கான செலவை ஏற்குமா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றும் சுவிஸ் சாலை மற்றும் வாகன விதிகளை மதித்து நடக்கவேண்டும் என்றும் பிரித்தானியா தன் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரான்ஸ்
பொதுப் போக்குவரத்து மற்றும் பெரிய நகரங்களில் சின்னச்சின்னத் திருட்டுகள் நடக்கலாம், அதனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சுவிட்சர்லாந்து செல்லும் தனது குடிமக்களை பிரான்ஸ் எச்சரிக்கிறது.
கனடா
கனடா அரசு, சுவிட்சர்லாந்தில் காதல் பெயரில் மோசடிகள் நடக்கும். ஆகவே சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் தன் குடிமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என எச்சரிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் ஏதாவது குற்றம் செய்து சிறைக்குச் சென்றால், உங்களை கனடாவுக்கு வரவழைப்பது மிகவும் கடினம்.
ஆகவே, குற்றச்செயல் எதிலும் ஈடுபடாமல் கவனமாக இருங்கள் என்றும் கனேடியர்களை எச்சரித்துள்ளது கனடா அரசு.
என்பது குறிப்பிடத்தக்கதாகும்