வியாழன், 26 செப்டம்பர், 2013

தவளை கடத்திய மனிதருக்கு அபராதம்


அரிய வகை தவளைகளை கடத்திய பிரான்ஸ் நபர் ஒருவர் சுவிஸ் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்சி ஒட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் 35 வகையான தவளைகளை ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 14ம் திகதி ஜேர்மன் நாட்டை கடந்து சுவிஸ் நாட்டினை கடக்க முயலும் போது சுங்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளார்.

சுங்க அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதில், இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஒட்டியதுடன் கலர் கலரான  ஒபோகா, எக்ஸிடோபேட்ஸ் மற்றும் ராணிடொமெயா போன்ற அரியவகை தவளை இனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவருக்கு 2,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விலங்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் முறையான சான்றிதழ்களை அந்தந்த அமைப்புகளிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆல்ப்ஸ் மலையில் இறந்த மாணவியின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு


சுவிட்சர்லாந்தில் ஆல்ஃபைன் மலையில் இறந்துபோன மாணவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆல்ஃபைன் மலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று ஈவோலின் ரிசாரட் மேலாளர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

தற்போது நடைபெற்று வந்த இந்த வழக்கில் மேலாளருக்கு 9 மாத சிறை தண்டனையும் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுவிஸில் சுருங்கிய பனிக்கட்டி மலை


சுவிஸ் நாட்டின் மார்ட்டரேட் பனிக்கட்டி (Morteratsch glacier) மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு உயர்த்திக்காட்டப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது மார்ட்டரேட் பனிக்கட்டி மலை.
அழகான அமைப்புடன் கூடிய இப்பனிக்கட்டி மலையானது வெகுவாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.

தற்போது இந்த பனிக்கட்டி மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் இந்த பனிக்கட்டி மலையானது 2.4 கிலோ மீற்றர் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பனிக்கட்டி மலையானது கொஞ்சம் அதிகமாகவே சுருங்கியுள்ளது.

இது குறித்து சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், இது கொஞ்சம் அற்புதமாக உள்ளது என்றும் அதேசமயம் அச்சுறுத்தலான விடயம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த பனிப்பாறையானது காலநிலை மாற்றங்களை எடுத்துக்காட்டுவதற்கு சிறந்த உதாரணம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

சனி, 21 செப்டம்பர், 2013

அதிபரின் சொத்து விபரத்தை அம்பலப்படுத்திய சுவிஸ் வங்கி


பீனி பேபி நிறுவனத்தின் அதிபரான டை வார்னர் சுவிஸ் வங்கியில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் டை வார்னர். 69 வயதான இவர் பிரபலமான பீனி பேபி பொம்மை தயாரிப்பு நிறுவனமான TYயின் அதிபர் ஆவார்.
இவர் 3 மில்லியன் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்து அதற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2002ம் ஆண்டு 49.1

மில்லியன் வருமானத்தை கொண்ட இவர் அவற்றில் 3.1 மில்லியன் தொகையை சுவிஸ் வங்கியில் மறைத்துவைத்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸின் UBS வங்கியானது இவரது சொத்துவிபரங்களை அம்பலமாக்கியது.

இதனைத் தொடர்ந்து 5 வருட சிறைத்தண்டனையும், 250,000 டொலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் போர்ப்ஸ் சஞ்சிகையின் மதிப்பிட்டின்படி 2.6 பில்லியன் சொத்துக்கள் கொண்ட இவர் அமெரிக்காவின் 209வது பணக்காரர் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
 

மீண்டும் சுவிஸ் பொருளாதாரம் உயர்வு!


சுவிட்சர்லாந்தில் பொருளாதாரமானது மீண்டும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

2013ம் ஆண்டில் யூன் மாதம் 1.4 சதவிகிதமாக இருந்த பொருளாதாரம் மூன்றே மாதத்தில் 1.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பொருளாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 2014ம் ஆண்டில் இந்த பொருளாதார உயர்வானது 2.3 சதவிகிதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செகோ (State Secretariat for Economic Affairs (seco)) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்குள்ளாக சர்வதேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பாக யூரோவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது சுவிஸ் நாடானது உள்நாட்டு பொருளாதாரத்தால் பயனடைந்து வருகிறது.

மேலும் வேலைவாய்ப்பின்மையில் 3.3 சதவீதமானது வருகின்ற ஆண்டில் 3.2 சதவீதமாக குறையும் என செகோ எதிர்பார்க்கிறது

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விடுதலையான சிறைக்கைதி மர்மமான முறையில்!


சுவிட்சர்லாந்தில் சிறையில் இருந்து தப்பிச் சென்று உயிரிழந்த கைதியின் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸில் அந்தமாட்டன் (39) என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 2011ம் ஆண்டு ஜெனிவா சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்சை பிறப்பிடமாக கொண்ட இவர் 2001ம் ஆண்டு ஜெனிவாவிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

பின்பு பாலியல் செயல்களில் ஈடுபட்ட வந்த இவர் கடைசியாக 2011ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் தண்டனை காலங்கள் முடிந்து சைகோதெரப்பிஸ்ட் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த இவர் மர்மமான முறையில் ஜேர்மனின் எல்லைப்பகுதியான அதாவது சுவிட்சர்லாந்துக்கு அருகில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

புதன், 11 செப்டம்பர், 2013

பலாத்கார குற்றவாளியின் காணொளி வெளியாகியது.


சுவிட்சர்லாந்தில் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியின் புகைப்படம் உள்ள காணொளியானது வெளியாகியுள்ளது.
சுவிஸில் கடந்த வாரம் மியாமி ஒட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர் மர்மநபரால் கற்பழிக்கப்பட்டார்.

மேலும், அந்த மர்மநபர் கற்பழித்ததோடு மட்டுமல்லால் இவரிடம் உள்ள பணங்களையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிசென்றுள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த மர்மநபர் நடைபெற்ற காணொளியினை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த ஒட்டல் விடுதியில் உள்ள கமெராவில் இவரது புகைப்படமானது இடம்பெற்றுள்ளது.

கருப்புநிற தோற்றத்தில் 178 செ.மீ உயரம் மற்றும் 104 கிலோ எடையுடன் உள்ள அந்த நபரின் புகைப்படமானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அடையாளங்களின் மூலம் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
Blogger இயக்குவது.