சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை
தற்போது பார்ப்போம்.
முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.அழைப்பு கடிதம்
சுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
மேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்? என்ன நோக்கத்திற்காக
தங்குகிறீர்கள்?
மேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள்? என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.
அதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.
உதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் திகதியும் இடம்பெற வேண்டும்.
முக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம்
நிரூபிக்க வேண்டும்.
இதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.
இவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்
சுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
இந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.
இந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.
காப்பீட்டு ஆவணம்
சில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.
அதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.
மேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை
அடைய முடியும்.