சுவிட்சர்லாந்தில் 20 முதல் 30 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுவிஸ் செக்யூரிட்டி நிறுவன டிரைவர் ஒருவர்
பணத்துடன் வானில் சென்று கொண்டிருந்த போது, போன் செய்த மர்ம நபர்கள், மகளை கடத்தி வைத்துள்ளதாகவும், கொள்ளையர்களிடம் பணத்தை உடனே ஒப்படைக்க வேண்டும் எனவும் மிரட்டியதாகவும்
கூறினார்.
இதனை தொடர்ந்து பணம் கொள்ளை போனதாகவும், அவரது மகள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அவளது உடலில் காயங்கள்
எதுவும் இல்லை.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச்சம்பவம் ஒரு நாடகம் என்பதைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பெண் தான் கடத்தப்பட்டதாகக் கூறியதும், அவள் தந்தை பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறியதும் அனைத்துமே அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து நடத்திய நாடகம் என்று பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
22 வயதுள்ள அந்தப் பெண்ணையும், அவளது தந்தையையும் அவர்களது கூட்டாளி ஒருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பணத்துடன் மாயமான அவர்களது கூட்டாளிகளான மற்ற மூன்று பேரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த யாராக இருந்தாலும் தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக