சுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள்
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்
வமற்ற செய்தி கூறுகிறது.
மொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.
சுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக