புதன், 26 பிப்ரவரி, 2020

கொடிய கொரானா வைரஸ். சுவிட்ஸர்லாந்திற்குள்ளும் பரவ ஆரம்பித்தது .

லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் பதிவாகிள்ளார்.இதேவேளை, ஜப்பானினுள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 861ஆக 
அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ள நிலையில் ஹொங்கொங் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 85ஆக 
அதிகரித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கொரோ வைரஸிற்கு முன் எச்சரிக்கையாக 
சென் பிரான்சிஸ்கோ நகரிற்கு அவசர நிலையை அறிவிப்பதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.வைரஸ் காரணமாக
 ஈரானினுள் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதெனவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், ஸ்பெய்ன் நாட்டின் கெனரி தீவில் உள்ள சுற்றுலா 
ஹோட்டலில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு தங்கியிருந்த 2000 சுற்றுலா 
பயணிகளுடன் ஹோட்டலை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் இத்தாலி நாட்டு வைத்தியர் எனவும் அவரை தனிமைப்படுத்தி சோதனையிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.இதேவேளை, முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து நாட்டில் (லுகானோ மாநிலத்தில்) 70 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இத்தாலி முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளமையினால் இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் கொரோனா அச்சத்தில் இருப்பதாக தகவல் 
வெளியாகியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.