நாட்டிலிருந்து 09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார்.
ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்
துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை
பெற்றிருந்தாள்.
அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி நிர்வாகம் ( Gymnasium ) தொடரலாம் என்ற அனுமதியுடன் தொடர்ந்தாள்.
அங்கும் அவள் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து 06 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது. அவளது மனதில் மருத்துவத்துறைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.
விடவில்லை தன் முயற்சியை தொடர்ந்தாள் . அவளது மருத்துவத்துறை கனவை நனவாக்கினாள் . தற்போது Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் கால்
பதித்துள்ளாள் தமிழிசை.
தமிழிசையின் தாயார் திருமதி வனஜா தமிழீழ நிழல் அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றி
இருந்தவர் ஆவார்.
பல இடர்களை கடந்து புலம்பெயர் நாடுகளில் குடியேறியுள்ள எமது மண்ணின் பிள்ளைகள் இன்று தம்மை பெற்ற பெற்றோரிற்கு தன்னை சுமந்த மண்ணிற்கு பெருமை தேடித்தந்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக