சனி, 16 ஜூன், 2018

இலங்கைத் தமிழ்ப் பெண் சுவிஸ்லாந்தில் தற்கொலை

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமைசிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரசசட்டத்தரணி அறிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண், சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரிவிண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.
டப்ளின் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூற வேண்டும்.
இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ன் நகரில்கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கடந்த திங்கட்கிழமை பசல்பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
உலகம்,பொதுவானவை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 ஜூன், 2018

ஒரே நாளில் சுவிஸில் இரண்டு முறை வாகன விபத்தை ஏற்படுத்திய இளைஞர்

சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Graubünden மாகாணத்தில் உள்ள Chur நகரத்திலேயே 27 வயது இளைஞர் ஒருவரால் குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளியன்று தனது காரில் சென்ற குறித்த இளைஞர் சாலை ஓரத்தில் வாகனத்தை மோதவிட்டுள்ளார்.பின்னர் அங்கிருந்து தப்பியதாகவும் பொலிசாருக்கு தெரிய வந்தது. குறித்த விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே நாள் இரவு குறித்த இளைஞர் சாலையின் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தி வந்தவர் திடீரென்று
 தடுப்பு வேலி மீது மோதியுள்ளார்.
இதில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளது. மட்டுமின்றி விபத்து நடந்த உடன் அங்கிருந்து மாயாமாகியும் உள்ளார். கண்காணிப்பில் இருந்த பொலிசார் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவரது வாகன உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
24 மணி நேரத்தில் அவர் ஏற்படுத்திய இழப்பிற்கு அவரிடம் இருந்தே அபராதம் வசூலிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அபராதம் பல ஆயிரம் பிராங்க் என இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விசாரணையின் ஒருபகுதியாக அவரிடம் இருந்து சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளையும் பொலிசார் பெற்றுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 6 மே, 2018

தமிழ் மொழி பொதுத்தேர்வில் சுவிசில் 5300 மாணவர்கள் பங்குபற்றினர்


சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.
இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள்
 தோற்றினர்.
பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும்.
தமிழக் ; கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழக் ; குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.
இத்தேர்வின்போது தமிழப்;பள்ளிகளின் முதல்வ்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழக்; குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக
 உள்ளது.
இவ் வாண்டு பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக் ; கல்விச்சேவை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ் மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இயற்கை உணவுகள் அதிவேக வளர்ச்சி சுவிட்சர்லாந்தில்

உணவுகளின் உற்பத்தி, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிஸில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒன்று, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம்
 தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு 4.6 சதவித அளவில் இருந்த Organic உற்பத்தி, 2017ஆம் ஆண்டில் 9 சதவிதமாக அதிகரித்தது. அதே சமயம் விற்பனை விகித பங்கும், 6 சதவிதத்தில் இருந்து 11.5 சதவிதமாக உயர்ந்ததாக 
தெரிய வந்துள்ளது.
அனைத்து முட்டைகளிலும் Organic-யின் பங்கு, கடந்த ஆண்டு நான்கில் ஒன்றாக இருந்தது. இது அனைத்து வகை முட்டைகளிலும் 26.6 சதவிதம் ஆகும். மேலும், Organic காய்கறிகள் 23.1 சதவிதமும், Organic Bread 22.1 சதவிதமும் ஒட்டுமொத்த சந்தையில் 
பங்கு வகிக்கின்றன.
இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் சுவிஸின் Organic உணவு சந்தை 7.6 சதவிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துள்ளது. விற்பனையான Organic உணவுகளின் ஒட்டுமொத்த மதிப்பு 2007ஆம் ஆண்டில் 1.3 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டில் 2.7 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் வருடாந்திர தனிநபம் செலவு CHF171-யில் இருந்து
 CHF320 ஆகும்.
மிகப்பெரிய Organic விநியோகஸ்த அங்காடிகளான Migros மற்றும் Coop ஆகியவை முறையே, 33 மற்றும் 44 சதவித வளர்ச்சியை Organic உணவுகள் மூலம் பெற்றுள்ளன. அதே வேளையில், சிறப்பு அங்காடிகளில் இதனால் 5 சதவித அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் Liechtenstein-யில் சுமார் 6,906 organic பண்ணைகளை அளித்ததன் மூலம், மொத்தமாக 279 புதிய உற்பத்தியாளர்கள் organic சான்றிதழ் அடையாளத்தை 2017ஆம் ஆண்டில் பெற்றனர். இவற்றில் 6,423 பண்ணைகள் Bio Suisse சான்றிதழ் திட்டத்தின் கீழ் உள்ளன.
எனினும், அதிக விலை நிர்ணயம் Organic உணவுகளின் வேகமான வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனை சுவிஸின் விலை கண்காணிப்புக் குழு அதிகாரி Stefan Meierhans
 அறிந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், 'பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லாமே Organic ஆக தான் இருந்தன. இப்போது அவை சிறப்பு அடையாளத்தை பெற்றுள்ளன. அதனால் நீங்கள் அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியுள்ளது.
சில சமயங்களில் இது மிகவும் உயர்வான விலை என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், போதுமான அளவு தேவைப்படும் வரை சந்தைகளின் விதியாக இந்த விலை உள்ளது' 
என தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 5 மே, 2018

புகைப்பிடிக்க சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் தடை உத்தரவு

சுவிட்சர்லாந்தின் Ticino மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளின் வெளிப்புற பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
மண்டலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நடியா கிசோல்பி இது குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளார்.
அதாவது உணவகங்களின் வெளிபுறங்களில் இருக்கும் பகுதியிலேயே புகைப்பிடிக்கும் பகுதி மற்றும் புகைப்பிடிக்க கூடாத பகுதி என பிரிக்க வேண்டும் என்பது நடியாவின் வாதமாக உள்ளது.
நடியா கூறுகையில், முழுவதுமாக புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, புகைப்பிடிக்காதவர்களை பாதுகாக்க வேண்டும் என கூறயுள்ளார்.
இந்த முடிவுக்கு புகையிலை எதிர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் தாமஸ் பியூட்லர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்களின் உள்ளே புகைப்பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாகவே தடை உள்ளது
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 26 ஏப்ரல், 2018

சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து

மூன்றாவது முறையாக Boston Consulting Group வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டின் European Railway Performance Index அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்துக்கு 7.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் பயணிகள் ரயில் சேவை, அதிகப் பயன்பாடு, சேவைத்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கை 
தெரிவிக்கிறது.
டென்மார்க்(6.8 புள்ளிகள்), பின்லாந்து(6.6 புள்ளிகள்) மற்றும் ஜேர்மனியை(6.1 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளிய சுவிட்சர்லாந்து முன்பு இருமுறை முதலிடத்தைப் பிடித்தது போலவே இம்முறையும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
பட்டியலின் கடைசியில் இருப்பது பல்கேரியா(1.9 புள்ளிகள்).
எவ்வளவு பயணிகள் எவ்வளவு முறை ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றாலும் தரத்தில் சற்றுக் கீழிறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த விடயத்தில் பின்லாந்தும் பிரான்ஸும் முந்திக்கொண்டன. இரண்டுமே 3.3க்கு இரண்டு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து 1.8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
பாதுகாப்பு விடயத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைவிட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள சுவிஸ் ரயில்வே இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பாடுபடும் என உறுதி எடுத்துக் கொள்வதாக
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 19 ஏப்ரல், 2018

இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயம்

7
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் 3.15க்கு  இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 சுற்றுலாப்பயணிகளை சென்ற இந்த பேருந்து, சூரிச்சின் வடக்குப்பகுதி அதிவேக வீதியில் வைத்து இரண்டு கனரக வாகனங்களுடன்
 மோதியுள்ளது
சம்பவத்தில் ஒருவர் கடுமையன காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.