செவ்வாய், 24 நவம்பர், 2020

கொவிட்-19 தொற்றினால் சுவிசில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் இதுவரை நான்காயிரத்து 222பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 751பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166பேர் 
உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 89ஆயிரத்து 430பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 522பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 700பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு
 திரும்பியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 21 மார்ச், 2020

இலங்கைக்கு சுவிஸிலிருந்து வந்த தலைமை போதகருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 
அதாவது  15,03,20, ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை.
வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார்.
தற்போது அவருக்கு கொறோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவிஸ் 
நாட்டில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
எனவே தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக மருத்துவ
 பரிசோதனைக்கு செல்ல வேண்டும். தனிமை படுத்தபட வேண்டும். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 26 பிப்ரவரி, 2020

கொடிய கொரானா வைரஸ். சுவிட்ஸர்லாந்திற்குள்ளும் பரவ ஆரம்பித்தது .

லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் பதிவாகிள்ளார்.இதேவேளை, ஜப்பானினுள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 861ஆக 
அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ள நிலையில் ஹொங்கொங் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 85ஆக 
அதிகரித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கொரோ வைரஸிற்கு முன் எச்சரிக்கையாக 
சென் பிரான்சிஸ்கோ நகரிற்கு அவசர நிலையை அறிவிப்பதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.வைரஸ் காரணமாக
 ஈரானினுள் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதெனவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், ஸ்பெய்ன் நாட்டின் கெனரி தீவில் உள்ள சுற்றுலா 
ஹோட்டலில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு தங்கியிருந்த 2000 சுற்றுலா 
பயணிகளுடன் ஹோட்டலை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் இத்தாலி நாட்டு வைத்தியர் எனவும் அவரை தனிமைப்படுத்தி சோதனையிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.இதேவேளை, முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து நாட்டில் (லுகானோ மாநிலத்தில்) 70 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இத்தாலி முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளமையினால் இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் கொரோனா அச்சத்தில் இருப்பதாக தகவல் 
வெளியாகியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 நவம்பர், 2019

ஓடுதளத்தில் இருந்து விலகி சுவிட்சர்லாந்தில் பேருந்து ஒன்றில் மோதியது


சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதாக
 தகவல் வெளியானது.
மேலும், குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து விலகி பேருந்து ஒன்றில் மோதி நின்றதாகவும் கூறப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்ததாகவும், இருவர் மரணமடைந்தனர் என்றும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் 
தகவல் வெளியானது.
ஆனால் இச்சம்பவமானது பெர்ன் விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விளக்கப்பட்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த அவசரகால மீட்பு பயிற்சியில் சுமார் 160 சிறப்பு படையினரும் 40 பொதுமக்களும் 15 பல்துறை நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி பெர்ன் மண்டல பொலிசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய விமான பாதுகாப்பு செயலாண்மை EASA இந்த பயிற்சியை முன்னெடுத்து
 நடத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 14 அக்டோபர், 2019

சுவிசில் அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்,

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.
அந்த 14 வயது பெண், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகம் செல்ல அனுமதியுள்ள நெடுஞ்சாலையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதையடுத்து பொலிசார் பொருத்தியுள்ள CCTV கமெராக்களில் 
சிக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Zofingen பகுதியில் அந்த பெண் கமெராவில் சிக்கினார்.
அந்த காரை தேடிச்சென்று அதன் உரிமையாளரை விசாரித்தபோதுதான் அந்த காரை அவரது பேத்தியான அந்த 14 வயது பெண் 
திருடிச் சென்றது தெரியவந்தது.
குற்றவாளிக்கு 14 வயது என்பதால், மேல் நடவடிக்கைக்காக அவரை மாகாண இளைஞர் விவகாரத்துறையிடம் 
பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 31 மார்ச், 2019

சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறது

சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை
 வெளிப்படுத்துகிறது.
வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள் (64%) கருதுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மற்றவர்கள் செய்யாத வேலைகளையும் வெளிநாட்டவர்கள் செய்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது (66%).
அதே நேரத்தில், சமூக பாதுகாப்பு அமைப்பை வெளிநாட்டவர்கள் தவறாக பயன்படுத்துவதாக கிட்டத்தட்ட பாதிப்பேர்
 (47%) நினைக்கிறார்கள்
அதேபோல, வெளிநாட்டவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிப்பதாக சிலரும் (28%), சுவிட்சர்லாந்து குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நல்ல கல்வியை தட்டிப்பறிப்பதாக சிலரும் (28%), தெருக்களில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக சிலரும் (28%) கருதுகிறார்கள். இந்த ஆய்வில் 3,127 பேர் பங்கேற்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 மார்ச், 2019

சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடங்கிய விமான நிலையம

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.
சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் 
ஒன்று இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த பயணிகள் உடனடியாக விமான அதிகாரிகளுக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றி சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஆனால் அதில் என்ன இருந்தது? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த சோதனையின் காரணமாக 6 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதாக புறப்பட்டு சென்றுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.