செவ்வாய், 20 ஜனவரி, 2015

அவதிப்படும் சுவிஸ் மக்கள்: 25 ஆண்டுகளாக தொடரும் அவலம்

சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 25 வருடங்களாக அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Ticino கிராமத்திலேயே இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இக்கிராமத்தின் Gordola பகுதியில் வசிக்கும் ஓஸ்வால்டோ காடிகா(67) என்பவர் கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என தங்களது வீட்டு ஜன்னல்களை எப்போதும் திறந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், இங்கே எங்கள் வீடுகளுக்குள் அசுத்தமான துர்நாற்றம் உள்ளே வந்தவிட கூடாது என எல்லா ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவன் ஒருவன் கூறுகையில், நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால், இந்த துர்நாற்றாத்தால் மிகவும் அவதிப்படுவார்கள். அதனால், என் நண்பர்கள் அடிக்கடி இங்கே வருவதை தவிர்த்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கிராமத்தை சுற்றி சுமார் 3 கி.மீ சுற்றளவில் உரம் சுத்திகரிக்கும் ஆலை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, கோழி பண்ணை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான ஆலைகள் அமைந்திருப்பதால், அவைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தான் இந்த துர்நாற்றத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மேயர் கூறுகையில், உரங்களை சுத்திகரிக்கும் கம்போடினோ ஆலை சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதுடன்,
 அது காற்று மண்டலத்தை வெகுவாக அசுத்தப்படுத்துவதால் அந்த ஆலையை மூட ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உர சுத்திகரிப்பு ஆலையின் நிறுவனர், இது பொய்யான குற்றச்சாட்டு. பிற உரங்கள் சுத்திகரிப்பு ஆலைகளை விட எங்களது ஆலை குறைவான மாசுபாட்டை தான் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் தொடரும் இந்த அவலத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் Basta Puzze என்ற ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் அப்பகுதி ஆலைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கான அனுமதியை கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.