புதன், 21 ஜனவரி, 2015

அகதிகளாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு தடுக்க சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகள் மறுசீராய்வு செய்யப்பட உள்ளன.
எனவே அவற்றை மத்திய புலனாய்வு துறைக்கு அனுப்பியுள்ளதாக அத்துறையின் செய்தி தொடர்பாளர் மார்ட்டின் ரீச்சலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவற்றின் முடிவுகள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும் என மார்ட்டின் ரீச்சலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களின் சான்றுகளை ஆய்வுக்காக அனுப்புவதாக சுவிஸில் வெளியாகும் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

மேலும், ஐ.எஸ் தீவிரவாத பிரிவை சேர்ந்த பல நபர்கள் அகதிகள் என்ற போர்வையில் ஏற்கனவே சுவிஸ் நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என NZZ am Sonntag என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள ஈராக்கியர்களில் மூன்றில் ஒரு அகதி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என மத்திய புலனாய்வு துறையில் உள்ள அதிகாரிகள் கருதுவதால், அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய குற்றவியல் துறையின் உயர் அதிகாரியான ஜாக்கூஸ் ரீபாண்ட் கூறுகையில், சுவிஸிற்குள் அகதிகளாக நுழையும் தீவிரவாதிகள் அகதிகளுக்குரிய சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றி தான் வருகிறார்கள் என்பதை தன்னால் ஏற்க முடியாது.
மேலும், அகதிகளின் சான்றுகளை அதிகாரிகள் நேர்மையாக, முறையாக ஆய்வு செய்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.