ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் ஒருவர் கடவுள் பெயரை வைத்திருந்த வங்கிகணக்கைய் வங்கி முடக்கியது!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுள் பெயரை வைத்திருந்த பெண் ஒருவரின் வைப்பு கணக்குகளை வங்கி ஒன்று முடக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் லவ்சென் நகரை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா ஏஜென்சி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் இவரது ஊழியர்களுக்கும் Postfinance என்ற வங்கி மூலமாக நிதிப் பறிமாற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேலாளருக்கும் அவரது ஊழியர்களுக்கும் வரவேண்டிய தொகையானது மிகவும் தாமதமாகவும், சில நேரங்களில் வராமலும் முடக்கப்பட்டது மேலாளருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கு வங்கி நிர்வாகிகளிடமே அவர் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளார். மேலாளரின் கேள்விக்கு பதிலளித்த வங்கி ‘மேலாளர் Isis Bihiry எனப் பெயர் வைத்திருந்ததால், அவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருதி வங்கி கணக்கினை முடக்கியுள்ளதாக’ 
பதிலளித்துள்ளனர்.
மேலாளரின் Isis என்ற முதல் பெயரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பின் பெயரும்(ISIS) ஒரே மாதிரி இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
Isis என்பது எகிப்து நாட்டு மக்கள் வணங்கி வரும் ஒரு பெண் கடவுளின் பெயர் ஆகும். மேலாளர் எகிப்து நாட்டை பூர்வீகமாக கொண்டதால், அந்த பெண் கடவுளின் பெயரை தனது முதல் பெயராக வைத்துள்ளதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மேலாளர் குழப்பத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளதால், அவருக்கும் அவரது ஊழியர்களுக்கும் சேர வேண்டிய தொகையை வங்கி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.