சுவிஸ்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Carl Eduard Gruner என்ற பெருமைக்குரிய பொறியாளர் இந்த சுரங்க வழி ரயில் பாதை அமைப்பது தொடர்பாக திட்டங்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டில் தொடங்கிய திட்டப்பணிகள் 69 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
Gotthard Base Tunnel என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோ மீற்றர்கள் ஆகும்.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள Seikan என்ற சுரங்க வழி ரயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக இருந்தது.
தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகியுள்ள இந்த சுரங்க வழி ரயில் பாதை அந்த பெருமைக்குரிய பெயரை பெற்றுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை ஐரோப்பிய நாடுகளில் ஒரு மிக்கியமான பாதையாக கருதப்படுகிறது.
சுவிஸின் Uri மாகாணத்தில் உள்ள Erstfeld என்ற பகுதியில் தொடங்கும் இந்த சுரங்க வழி ரயில் பாதை, Ticino மாகாணத்தில் உள்ள Bodio என்ற பகுதியில் நிறைவடைகிறது.
யூன் 1ம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.
யூன் 1ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக