சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். திடீரெனயாரும் எதிர்பார்க்காத போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால்
சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக
உயிர் இழந்தனர்.
ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது உயிர் ஊசலாடுவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் அருகேயுள்ள ரெயில் நிலையம் நோக்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் நடப்பது
மிகவும் அரிது.
அங்கு ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவே சில நேரங்களில் பாதகமாக அமைந்து விடுகிறது. எனவே முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக