திங்கள், 3 ஏப்ரல், 2017

பாலியல் தாக்குதல்கள் சுவிஸில் அதிகரிப்பு: புலம்பெயர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகளவில் வெளிநாட்டினர்களால் ஏற்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சுவிஸில் கடந்தாண்டு நிகழ்ந்த பாலியல் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.
அதில், 2015-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு பாலியல் தாக்குதல்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டினர்களால் அதிகளவில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக அந்த அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்தாண்டு பாலியல் தாக்குதல்களை நடத்தியதாக 495 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 298 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
மேலும், இந்த 298 நபர்களில் 51 பேர் சுவிஸில் புகலிடம் கோரி காத்திருப்பவர்கள் என பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வன்கொடுமைக்கு வெளிநாட்டினர்கள் அதிகளவில் காரணமாக இருப்பது கவலை அளிக்கிறது.
நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார விளம்பரங்கள் வெளியிட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.