வியாழன், 27 ஏப்ரல், 2017

ஐம்பத்தைந்து ஆண்டுகள் சுவிஸில் வசித்த நபரைய்நாடு கடத்த அரசு உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து 55 ஆண்டுகள் வசித்து வந்த நபர் ஒருவரை அவரது பெற்றோரின் சொந்த நாடான ஸ்பெயினிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள Freiburg நகரில் கடந்த 1962-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை வளர்ந்தது முதல் கல்வி பயின்றது, அலுவலக வேலைக்கு சென்றது எல்லாம் சுவிட்சர்லாந்து நாட்டில் தான்.
சுவிஸில் குடியிருப்பு அனுமதி பெற்ற அவர் 17 வயதானது முதல் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
திருடுவது, அடிதடியில் ஈடுப்படுவது, போதை மருந்து பழக்கம், சாலை விதிகளை மீறுவது, அரசு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுப்பட்டது உள்ளிட்ட 31 குற்றங்களை பல்வேறு வயதில்
 செய்து வந்துள்ளார்.
இவற்றில் சில குற்றங்களுக்காக சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். தற்போது 55 வயதை அடைந்துள்ள நபரை ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்ப சுவிஸ் குடியமர்வு அதிகாரிகள் 
உத்தரவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கடந்தாண் இவருடைய குடியிருப்பு அனுமதியை அதிகாரிகள் பறித்துள்ளனர்.
மேலும், இவருக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
சுவிஸில் பிறந்து, கல்வி பயின்று பணியில் இருந்தாலும் கூட சமூகத்துடன் ஒற்றுமையாக இருக்கவில்லை எனில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.