சுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்
வசித்து வருகிறார்.
சில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம்போல் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனியாக சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, சாலையில் நடந்து வந்த நபர் ஒருவர் திடீரென சிறுமி மீது பாய்ந்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், சிறுமியை கற்பழிக்கும் நோக்கில் அருகில் உள்ள அடர்ந்த காட்டிற்கு இழுத்து செல்ல முயன்றுள்ளார்.நபரின் தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாமல் சிறுமி உதவிக்கு அலறியுள்ளார்.அப்போது, காரில் வந்த பெண் ஒருவர் சிறுமியின் அலறலை கேட்டு காரை
நிறுத்தியுள்ளார்.
பின்னர், காரை விட்டு இறங்கிய அவர் விரைவாக சென்று சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.நிலைமையை உணர்ந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பெண் பொலிசாரிடம் புகார் அளித்தபோது, ‘சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர் எனக்கு பரிச்சயமானவர்.
இங்கு வசித்து வரும் பாதிரியார் ஒருவரின் மகன் தான் அந்த தாக்குதல்தாரி’ என புகார் அளித்துள்ளார்.பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் 56 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக