சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மரணமானவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ் அரசாங்கம் அ
ழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த சுப்பிரமணியம் கரனின் வீட்டிற்கு சென்றிருந்த சுவிஸ் தூதரக அதிகாரிகள், குடும்பத்தாரின் நிலையையும் பார்வையிட்டிருந்தனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் குடும்ப உறுப்பினர்கள் சுவிஸ் தூதரகத்தினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு , மிக விரைவில் சுவிஸ் பயணத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவரின் மனைவி, இரு மகள்கள், மற்றும் சகோதரன் உள்ளிட்டவர்களை இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுவிஸ் அரசின் செலவுடன் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சுவிஸ் பொலிஸார், குறித்த இலங்கையரை சுட்டுக்கொன்றமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக