புதன், 11 செப்டம்பர், 2013

சுற்றுச்சூழல் பிரசாரகருக்கு கொலை மிரட்டல்


 சுவிஸில் சுற்றுச்சூழல் பிரசாரம் செய்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பிரான்ஸ் வெபர், சுற்றுச்சூழல் பிரசார வேலையில் ஈடுபட்டு வருபவர்.
இந்நிலையில் இவருக்கு தபாலின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் உனது சட்டத்தரணி மற்றும் மகள் சாகவேண்டும், அவர்களுக்கான இறுதிநாள் நெருங்கிவிட்டது, அந்த காலமானது 18 முதல் 24 மாதங்களே ஆகும் என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதமானது ஆகஸ்ட் 12ம் திகதி எழுதப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெபர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஆடுகளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

 
சுவிசில் நடைபெறவிருந்த ஆடுகளம் மாபெரும் நடனப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது!

நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை மூன்றாவது முறையாக இவ்வாண்டு சுவிஸில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளை நடைபெறவிருந்த இவ் ஆடுகளம் நடனப் போட்டி நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதனை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வானது மீண்டும் எப்போது நடைபெறும் என்னும் விபரத்தினை லங்காசிறியினூடாக அறிவிக்கப்படும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர்.

சனி, 7 செப்டம்பர், 2013

மூத்த குடிமகனைபெண்ணின் ஆடையை அணியுமாறு!!


இன அடிப்படையில் மூத்த குடிமகன் ஒருவரை Appenzell Ausserhoden உள்ள மருத்துவமனையில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக நான்கு செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த மூத்த குடிமகன் ஒருவரை அங்கு பணி புரியும் நான்கு செவிலியர்கள் சேர்ந்து பெண்ணின் ஆடையை கொடுத்து அணிய சொல்லி கட்டயாப்படுத்தியுள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் கிண்டல் செய்தும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதில் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நபர் பொலிசல் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் பணிபுரிந்த நான்கு பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் ஒரு செவிலியர் அவரை 30 முதல் 45 நிமிடம் வரை கிண்டல் செய்து பேசியதாகவும் கூறப்படுகின்றது.

பெண்ணின் ஆடையை அணிய சொன்ன நான்கு பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் மற்றும் உள்ள ஒருவர் அவகாச காலம் வரை பணிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர்களை பணி நீக்கம் செய்வதுடன் தண்டனை வழங்கவேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

முறையாக முதலிடத்தில் சுவிஸ்


உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) 10வது இடத்திலும் உள்ளது.
ஆனால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி

காணப்படுவதாக WEF உலகளாவிய நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதில் எவற்றையும் குறிப்பிட்டு கூற இயலாது.

இது குறித்து இந்நிறுவனம் கூறுகையில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தெரிவு செய்வதற்கு 12 காரணிகளை கையாண்டுள்ளோம்.
அதில் தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள், சந்தை திறன், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்

 

வியாழன், 5 செப்டம்பர், 2013

இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு! ஆபத்தான நிலையில்!!!!


ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.
இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.
இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதன், 4 செப்டம்பர், 2013

விற்கப்படும் குரோனட்டுக்கு உரிமை கொண்டாடும் நியுயார்க் பேக்கரி



சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் நியூயார்க் வகையைச் சேர்ந்த குரோனட்டால் (Cronuts) விற்பனையாளர்கள் வருத்ததில் உள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் மான்ஹேட்டனில் உள்ள பேக்கரி ஒன்றில் குரோனட் (Cronuts) இனிப்பு பலகாரமானது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்போடு விற்பனையாகி வந்தது.
இதனை அன்செல்(Ansel) என்பவர் நியூயார்க்கில் உற்பத்தி செய்து வந்தார். மேலும் இந்த பேக்கரியில் ஒரு குரோனட் ஒன்று 5 டொலருக்கு விற்கப்பட்டது.
பேக்கரியை திறப்பதற்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று குரோனட்டை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்
இந்நிலையில் திடீரென்று கடந்த இரண்டு வாரங்களாக வாடிக்கையாளர்கள் அனைவரும் சூரிச் மற்றும் லுசேர்னில் உள்ள மைக்ரோஸ் பல்பொருள் அங்காடியில் ஜுவா பேக்கரியில்(Jowa Bakery) இருந்து உற்பத்தி செய்யப்பட்ட குரோனட்டை வாங்க ஆரம்பித்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்செல், ஜுவா பேக்கரியானது என்னுடைய குரோனட் வகையினை உபயோகப்படுத்தி புதிய பேக்கரியினை நடத்தி வருகிறது என்றும் இது நியூயார்க் வகையினை சேர்ந்தது எனவும் சுவிஸ் ஊடகங்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஜுவா பேக்கரி, குரோனட் என்ற பெயரினை சுவிஸ் வர்த்தக சட்டங்களின்படி யூலை 25ம் திகதி முதல்பதிவு செய்துள்ளோம்.
மேலும், நாங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி அதன் சொந்த செய்முறையில் இதனை உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

தீர்வு சுவிஸில் ரயில்வே விபத்துக்கு


சுவிட்சர்லாந்தில் ஏற்படும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் சுவிஸில் நடைபெற்ற கோர ரயில் விபத்தால் 20 பயணிகள் படுகாயமடைந்தனர், ஒட்டுனர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 1700 ரயில்வே சிக்னல்களின் வேகத்தை கண்காணிப்பதற்காக உபகரணங்களை நிறுவுவதற்கான திட்டங்களை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் ரயில்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளால் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வெளிவந்த நிலையில் உள்ளன.
இது குறித்து கூட்டாட்சி ரயில்வே தலைவர் ஆன்ட்ரியாஸ் மேயர்(Andreas Meyer) கூறுகையில், ரயில்வே விபத்துக்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் ரயில்களின் தொழில்நுட்ப பிரச்சனைகள் குறித்து பரிசோதித்து கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மையென்ற பட்சத்தில் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
Blogger இயக்குவது.