ஞாயிறு, 12 மார்ச், 2017

உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி..!!

சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். திடீரெனயாரும் எதிர்பார்க்காத போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் 
சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக
 உயிர் இழந்தனர்.
ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது உயிர் ஊசலாடுவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் அருகேயுள்ள ரெயில் நிலையம் நோக்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் நடப்பது 
மிகவும் அரிது.
அங்கு ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவே சில நேரங்களில் பாதகமாக அமைந்து விடுகிறது. எனவே முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 மார்ச், 2017

சுவைச் ( Schwyz )என்ற பகுதியில் சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்!

சுவிட்சர்லாந்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக 
கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும் என்று 
கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் முக்கிய நகரான Schwyz என்ற பகுதியில் இரவு 9.12 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது வடகிழக்கு பகுதியின் குலாஸ்பன்ஸ் பகுதிக்கு 6 கி.மீற்றர் தொலைவில் உள்ளதாக
 கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் பொலிசாருக்கு தொடர்ந்து தொலைபேசிகள் அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும், இதுவரை 20 முதல் 30 தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளதாகவும் 
கூறப்படுகிறது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் இரவில் நிச்சயம் பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 13 பிப்ரவரி, 2017

இனி வெளிநாட்டவர்களுக்குசுவிஸ்சில் வேலை வாய்ப்பு இல்லை ?

சுவிற்சர்லாந்தில் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்ககூடாது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.
சுவிஸ் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Toni Brunner அளித்துள்ள பேட்டியில், வெளிநாட்டவர்கள் சுவிஸ்க்கு வந்து குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அறிக்கையை மூன்று வருடங்களுக்கு முன்பே மக்கள் முன்பு தாக்கல் செய்தோம்.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அதிலும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள் அதிகளவில் சுவிஸ்க்கு வருவது எரிச்சலாக உள்ளதாக கூறியுள்ளார்.
சுவிஸில் பணிகள் செய்ய போதுமான ஆட்கள் ஏற்கனவே உள்ளதாக கூறியுள்ள Toni மற்றவர்கள் இங்கு வருவதால் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிறது.
சுவிஸில் வேலைக்கு ஆள் எடுக்கிறவர்கள் சுவிஸ் மக்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என
 தெரிவித்துள்ளார்.
தற்போது சுவிற்சர்லாந்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வசித்து வருகிறார்கள் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

எண்ணுற்றி என்பது நிலநடுக்கங்கள்:ஏற்பட்டதாக வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016-ம் ஆண்டில் மட்டும் 880 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் நில அதிர்வுகளை பதிவு செய்யும் அலுவலகம் கடந்தாண்டில் நாடு முழுவதும் நிகழ்ந்த நிலநடுக்கங்களை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், நாடு முழுவதும் 880 நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில் 31 நிலநடுக்கங்கள் ரிக்டாரில் 2.5 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 24-ம் திகதி வாலைஸ் மாகாணத்தில் உள்ள Leukerbad பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டாரில் 4.1 என்ற அளவில் பதிவானது தான் நாட்டிலேயே மிக மோசமான நிலநடுக்கமாகும்.
எப்போதும் போல Valais மற்றும் Graubunden ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த நிலநடுக்கங்களுக்காக அதிகம் பாதிப்பை
 சந்தித்துள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் ரிக்டாரில் 6 மற்றும் அதற்கு மேலான அளவில் நிலநடுக்கங்கள் 50 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.
கடந்த 1946-ம் ஆண்டு வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sierre என்ற பகுதியில் 6.2 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், சுவிஸ் வரலாற்றில் கடந்த 1356-ம் ஆண்டு பேசல் நகரில் 6.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது தான் மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தரையில் மோதவிருந்த விமானம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

 சுவிட்சர்லாந்து விமானம்  300 பயணிகளை ஏற்றிச் செல்லும்  விமானம் ஒன்று  இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி கனடாவில் இறக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுவிட்சர்லாந்தின் சர்வதேச விமானமான Boeing 777 என்ற விமானம் கடந்த புதன் கிழமை. Zurich பகுதியில் இருந்து கலிபோர்னியா பகுதிக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது
வானில் சுமார் 36,000 அடிக்கு மேல் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக கனடாவின் Iqaluit விமான நிலையத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதில் வேகமாக வரும் விமானம் அங்கு விமான நிலையத்தில் இருக்கும் பனிகளுக்கிடையே(சுமார் -6 டிகிரி) சீறி பாய்ந்து அதன் பின்னர் நிறுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 14 மணி நேரம் தாமதாமாக சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 14 நேரம் தாமதமாக கொண்டு வந்து சேர்த்தால், குறித்த விமான நிறுவனத்தின் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி, அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



$

புதன், 18 ஜனவரி, 2017

சுவிஸில் நிகழ்ந்த கோர சம்பவம் பனிச்சரிவில் சிக்கி 1,884 பேர் பலி!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்த நாள் முதல் தற்போது வரை சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்படுவது என்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கும் பிடித்தமான பொழுதுபோக்காகும்.
ஆனால், ஆபத்து நிறைந்த இவ்விளையாட்டில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவு விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்த 1936-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தற்போது வரை பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
2017 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல் பனிச்சரிவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உரி மாகாணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் பனிச்சரிவில் சிக்கி சுமார் 400 மீற்றர் ஆழத்தில் சிக்கியுள்ளார்.
நண்பர்கள் அவரை தோண்டி மீட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து வாலைஸ் மாகாணத்தில் நண்பர்கள் ஐவர் கடந்த சனிக்கிழமை அன்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு விபத்தில் 3 பேர் சிக்கியுள்ளனர். உடனடியாக மூவரும் ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக மூன்றாவது நபர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பனிச்சறுக்கு விளையாட்டின்போது உயிரிழந்த இருவரின் மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 16 ஜனவரி, 2017

இளம்பெண் ஒருவருக்கு சுவிசில் இழைக்கப்பட்ட அநீதி!

Nancy Holten என்னும் பெண் வேறு நாட்டில் பிறந்திருந்தாலும், தன் எட்டு வயது முதல் சுவிற்சர்லாந்தில் தான் வசித்து வந்தார்.
அவர் மீது எந்தவொரு குற்ற பதிவோ அல்லது தவறுகளோ இதுவரை இருந்ததில்லை. ஆனாலும் அவருக்கு சுவிற்சர்லாந்து பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? சுவிஸ்ஸில் அதிலும் முக்கியமாக வடக்கு சுவிற்சர்லாந்தில் குதிரை பந்தயம் நடத்தும் பழக்கம் உள்ளது. மேலும் அங்கு ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி உணவுகளை எல்லோரும் சாப்பிடும் Sunday roast என்னும் கலாசாரம் உள்ளது.
இயற்கையிலேயே சைவம் பிரியரும், விலங்குகளை வதம் செய்வதை விரும்பாதவருமான Nancy இதை எதிர்த்து சிலருடன் சேர்த்து பல முறை போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர்களை கலாச்சாரத்தை Nancy எதிர்க்கிறார் என கரம் வைத்து அந்நாட்டின் மாநகராட்சி ஊழியர்கள் இவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் அலைகழிக்கின்றனர்.
இது குறித்து Nancy கூறுகையில், நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை இரு முறை அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
நான் என்னவோ குற்றவாளி போல என்னை அவர்கள் நடத்துகிறார்கள்.
இது ஜனாநாயகத்தின் மேலே கேள்விகுறியை ஏற்படுத்துகிறது , நான் இது பற்றி மண்டல அரசிடம் முறையிட்டுள்ளதாக 
கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.