உலக விஞ்ஞானிகளுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கோரோனா என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
கோரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால் கடந்த 2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.கோரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனையடுத்து சவுதி அரேபியாவில் சுமார் 636 பேர் பாதிக்கப்பட்டதுடன், 193 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த நோயை போக்குவதற்கான மருந்தை சுவீடன் நாட்டை சார்ந்த எட்வர்ட் என்ற விஞ்ஞானியும் சுவிசை சேர்ந்த வால்கோர் என்ற ஆய்வாளரும் தங்களது ஆராய்ச்சி குழுவினருடன் இணைந்து ஆய்வில் செயல்பட்டு, k22 என்ற மருத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த மருந்து கோரோனா வைரஸ் கிருமியை தாக்கி கொல்லும் வல்லமை படைத்தது என அவர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக